இயக்குநர் சேரன் வெற்றி.. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல் இன்று நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. அதன்பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 'நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி பெற்றார்.

south-indian-film-writers-association-election-director-cheran-elected-as-the-president

சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்க அரங்கத்தில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 2 அணிகள் போட்டியிட்டன.

‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரனும், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு விசி குகநாதனும் போட்டியிடட்டனர். அதேபோல் பிற பதவிகளுக்கும் இரு அணிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

முதலில் தலைவர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் 432 ஓட்டுகளில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட சேரன் 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசி குகநாதன் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக இயக்குனர் சேரன் தேர்வாகியுள்ளார்.

இந்த சங்கத்தின் துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், பொருளாளர், இணை செயலாளர்கள் உள்பட பிற பதவிகளுக்கு பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+