தவெக கூட்டணியில் பாமக இணைந்தால்! விசிகவின் நிலைப்பாடு என்ன? வன்னியரசின் கோனார் உரை விளக்கம்
ஈரோடு: தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நல மேம்பாட்டுக்காக கட்டப்பட்ட தொழிற்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டேன்.
இப்பணிகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பின்னலாடை தொழிற்சாலை தொடங்கப்படும். இதில் 200 பயனாளிகள் பயனடையவுள்ளனர். தற்போது 30 விழுக்காடு விண்ணப்பங்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டடங்களின் நிலை குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பயன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தொழிற்கூடங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது குறித்து கடந்த கால ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும்.
முழுமையாக கட்டாமல் இருப்பது, பயன்பாட்டிற்கு வருமானம் என்பதால் 70 விழுக்காடு விண்ணப்பிக்காமல் உள்ளனர். இப்பணிகள் துரிதப்படுத்தி முடிக்கப்படும்.
சாதி அரசியல் காரணமாக இத்தொழிற்கூடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற கருத்துள்ளது குறித்த கேள்விக்கு "கேள்வியும் பதிலும் நீங்களே என்பது சரியாக உள்ளது" என்றும் வெளியே இருந்து போராட்டம், கோரிக்கை வைத்திருந்த நாங்கள் முதல் முறையாக அமைச்சரவையில் செயல்படுத்தும் இடத்தில் உள்ளோம். எனவே,செயல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறோம்.
தவெகவுடன் பாமக கூட்டணி வைத்தால் விசிக நிலைபாடு குறித்து பல இடங்களில் திருமாவளவன் பதிலுரை அளித்துள்ள நிலையில் இதற்கு கோனார் உரை எழுத முடியது. இதற்கு,திருமாவளவனின் பதில் தான்.
சமூகநீதித்துறை பெயர் மாற்றத்தில் தலைவர் திருமாவளவனின் கருத்துதான தொண்டனான என்னுடைய கருத்தும். தலைவரின் கருத்துக்கு உட்பட்டு கட்டுப்பட்டு இருப்பவர்கள் தான் உண்மையான தொண்டராக இருக்க முடியும். எனவே அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.
சமூகநீதித் துறை பெயர் மாற்றம் குறித்து இருவேறு கருத்துக்கள் அல்ல. தலைவரின் கருத்துதான் எங்களின் கருத்தும். மலை பகுதியில் பழங்குடியின பள்ளிகள், சாலைகள்,சூழல் குறித்து ஆய்வு செய்து கோரிக்கை கேட்டறிந்துள்ளோம்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அதற்கான செயல்பாடு தொடங்கும். மாணவர்கள் விடுதியில் முதல்வர் ஆய்வு செய்தபோது மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை செய்ய வழிகாட்டியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள உணவுக்கான தொகையை உயர்த்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்போம். அம்பேத்கர் கல்வி உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
ஆதித் திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான, விரிவுபடுத்தப்பட்ட, வளமை மற்றும் செழுமைபடுத்தப்பட்ட பட்ஜெட்டாக இருக்கும்.
சமூகநீதி சார்ந்த அதிகாரிகள் இருப்பதால் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது குறித்த கேள்விக்கு துறை சார்ந்த கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.
அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரிகள் அமைச்சர்கள் தவறு செய்யக்கூடாது என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவறு செய்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். எந்தவித குற்றவாளிகளை செய்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்ட தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இவ்வாறு வன்னியரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications