லைவ் லொகேஷனை கணவருக்கு தெரியாமல் அனுப்பிய மனைவி... கிருஷ்ணகிரி 3வது வளைவில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இப்படியொரு பயங்கரம் நடந்துள்ளது.. இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஆந்திர மாநிலம் மல்லப்பக்கொண்டா மலைப்பகுதியில் நடந்துள்ளது.. எனவே, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ளது தேவதாசனப்பள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமேஷ் (35). இவருக்கும் ஹாசினி (30) என்பவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Live Location shared

ஹாசினி செய்த மாஸ்டர் பிளான்

ரமேஷ் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வந்தார். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஹாசினியும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போயனப்பள்ளியைச் சேர்ந்த கங்காதர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை ஏற்காத பெற்றோர்கள், ஹாசினியை ரமேஷுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து, முதல் பிரசவத்திற்காக ஹாசனி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.. பிரசவம் முடிந்தும்கூட, அங்கேயே ஒரு வருடத்துக்கும் மேலாக தங்கியிருந்துள்ளார். அப்போது அவருக்கும் பழைய காதலன் கங்காதருக்கும் இடையே மறுபடியும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மலைப்பாதை 3வது வளைவு

பிறகு ஹாசினி ஓசூருக்கு தன்னுடைய கணவர் வீட்டிற்குச் சென்ற பிறகும்கூட, கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் ரமேஷ் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதிய ஹாசினியும் கங்காதரும், அவரைத் தீர்த்துக்கட்ட பிளான் போட்டார்கள்.

அதன்படி, கடந்த 13ம் தேதி ஹாசினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஆந்திராவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை, மல்லப்பக்கொண்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று ஹாசினி கேட்டுள்ளார்.. உடனே ரமேஷூம், மனைவி, குழந்தைகளை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளனர்.

"லைவ் லொகேஷன்" ஷேர் செய்த மனைவி

மலைப்பாதையின் 3வது வளைவில் சென்று கொண்டிருந்தபோது, ஹாசினி தனது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலன் கங்காதருக்குத் தனது செல்போன் மூலம் "லைவ் லொகேஷன்" அனுப்பியுள்ளார். இதனை பயன்படுத்தி, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கங்காதர் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், அவரை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று, கை மற்றும் கால்களை கயிறுகளால் கட்டிப்போட்டு, கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கணவர் இறந்துவிட்டாரா? என்பதை கன்பார்ம் செய்துகொண்ட ஹாசினி, தனது குழந்தையுடன் கள்ளக்காதலன் கங்காதருடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். .

காட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி

இதனிடையே, கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பாததால் பயந்துபோன உறவினர்கள், போலீஸில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். ஹாசினி, ரமேஷ் இருவரின் செல்போன் நம்பர்களை கண்காணித்தனர்..

அப்போதுதான், 3வது மலைப்பாதை வளைவில் நடந்த கொடூரம் அம்பலமானது.. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ஹாசினி மற்றும் கள்ளக்காதலன் கங்காதரை கைது செய்தனர்.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கங்காதரின் நண்பர்களான பவன், சேகர், சந்தோஷ், சுரேந்திரா ஆகியோரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் சிவா ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். கைதான 6 பேரும் ஜெயிலில் உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+