வேலூரில் லாரி பின்னாடியே ரோட்டில் ஓடிய விஜயபாஸ்கர்.. 15 கி.மீ. காரில் சேஸிங்.. கண்ணெதிரே அக்கிரமம்
வேலூர்: கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக எந்நேரமும் புகார்கள் குவிந்தபடியே உள்ளது.. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரியை சமீபத்தில் மடக்கி பிடித்திருந்தது. இந்நிலையில், கரூரில் மீண்டும் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது.

நில மோசடி வழக்கு
இதனடிப்படையில சிபிசிஐடி போலீசார் கடந்த வருடம் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், பினாமி பெயரில் இந்த சொத்தை அவர் வாங்க முயன்றாரா? என சென்னை, உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
இதுதொடர்பாக நில உரிமையாளருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சார்பில் ஒருவர் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருகிற 23-ந்தேதி விஜயபாஸ்கர் அல்லது அவருடைய வக்கீல் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியிருப்பதால், வழக்கு விசாரணைக்கு பிறகே வழக்கின் நிலை குறித்து விரிவாக கூற இயலும் என்று வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரட்டி சென்ற விஜயபாஸ்கர்
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் விஜயபாஸ்கர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மண்மங்கலம் அருகே சென்றபோது, மணல் அள்ளி வந்த லாரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனே அந்த லாரியை பின்னாடியே தன்னுடைய காரில் துரத்தி சென்றார்.. சுமார் 18 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி கொண்டே சென்றார் விஜயபாஸ்கர்..
இறுதியில், நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனை சாவடியில் மணல் லாரியை மடக்கி பிடித்தார். அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடமும் ஒப்படைத்தார்.
கட்சி நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்
இந்த மணல் கடத்தல் சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்தது என்பதால், அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்..
பிறகு மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் சென்ற விஜயபாஸ்கரும், அதிமுக நிர்வாகிகளும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனர். இறுதியில் அதிமுக நிர்வாகி சரவணனை புகார் கொடுக்குமாறு அறிவுறுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதற்கு பிறகு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
லாரி ஒப்படைப்பு
இதையடுத்து அதிமுக பிரமுகர் சரவணன் தந்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது.. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிடிபட்டதால் லாரியை போலீசார் பரமத்தி போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்தனர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 15 கிமீ மணல் லாரியை விரட்டி சென்ற சம்பவம்தான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications