வாணியம்பாடியில் எமனாக காத்திருந்த வாஷிங் மெஷின்.. வேலூர் கற்பகத்திற்கு என்ன நடந்தது?
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவர் தனது வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக வீட்டில் இருந்த வாஷிங்மெஷினை இயக்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்விட்ச் வழியாக மின்சாரம் கற்பகம் மீது பாயந்துள்ளது. மறுபடியும் அவர் எழுந்திருக்கவே இல்லை.. வாஷிங்மெஷின் அவருக்கு எமனாக மாறி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு பலருக்கும் ஆர்சிடி ஸ்விச்சர் பற்றி தெரிவது இல்லை. மின்சார கசிவு ஏற்படும் போது, அது மின்சார அதிர்ச்சி மற்றும் மின்சாரத்தில் தீ விபத்து ஏற்படும் போது ஆர்சிடி ஸ்விச்சர் இந்த ஆபத்துகளைத் தடுக்க உதவுகிறது. மின்சார கசிவு ஏற்பட்டால், ஆர்சிடி ஸ்விச்சர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துவிடும், இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்துவிடும். அதாவது ஆர்சிடி கருவி மின்சார ஓட்டத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும். மின்சார ஓட்டம் சீராக இல்லாமல், ஏதாவது கசிவு ஏற்பட்டால், அது உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விடுவதால் மின்சாரம் தாக்கி யாரும் உயிரிழப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது.

ஆர்சிடி கருவி கட்டாயம்
எனவே தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), அனைத்து மின்சார இணைப்புகளிலும் ஆர்சிடி கருவியை பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது. இதன் மூலம், மின்சார விபத்துகளைத் தடுக்க முடியும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இன்னமும் பல வீடுகளில் ஆர்சிடி கருவி பொருத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தில் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வாஷிங் மெஷின்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் கற்பகம் என்ற பெண், தனது வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக வீட்டில் இருந்த வாஷிங்மெஷினை இயக்கி உள்ளார். அப்பொழுது யாரும்எதிர்பாராத விதமாக ஸ்விட்ச் வழியாக மின்சாரம் தாக்கி கற்பகம் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக கற்பகத்தை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் இருந்த மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்,அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் துணிகளை துவைக்க வாஷிங்மெஷினை இயக்கிய போது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications