விசித்திராவின் விபரீத காதல்.. வித்தியாசமான காதல்.. வில்லங்கமான காதல்.. அட விளங்காத காதல்!
2 வயது குழந்தைக்கு சூடு போட்ட நபர், தாய் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
வேலூர்: விசித்திராவின் விபரீத காதல் இது.. வித்தியாசமான காதல் இது.. விவகாரமான காதல் இது.. விளங்காத காதல் இது.. தன்னுடைய உறவுக்கு இடையூறாக இருந்ததால், விசித்திராவின் குழந்தைக்கு சிகரெட்டால் உடம்பெல்லாம் சூடு வைத்துள்ளான் ஒரு அயோக்கிய ராஸ்கல்!
வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்தவர் விசித்ரா. கல்யாணம் ஆகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்துவிட்ட விசித்திரா, ஒரு செல்போன் கடையில் வேலைக்கு போனார். போன இடத்தில் உதயகுமார் என்ற இளைஞனுடன் பழகி வந்தார்.
இதனால் விசித்திராவின் அம்மா மகளை கூப்பிட்டு கண்டித்தார். ஆனால் விசித்திராவோ, குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, வாடகைக்கு வீடு எடுத்து உதயகுமாரையும் கூப்பிட்டுக் கொண்டு போய்விட்டார். ஒரு கட்டத்தில் விசித்திராவின் தாய் இறந்துவிட, குழந்தை மீண்டும் தாயிடமே வந்தது.

சிகரெட்
அப்போது இருவரின் உறவுக்கும் 2 வயது குழந்தை இடையூறாக இருந்து கொண்டே இருப்பதாக உதயகுமார் அடிக்கடி விசித்திராவிடம் சொல்லி வந்ததாக தெரிகிறது. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் உதயகுமாருக்கு எரிச்சல் ஆகி இருக்கிறது. அதனால், குழந்தைக்கு சிகரெட்டால் பல இடங்களில் சூடு வைத்துள்ளான்.

பிஞ்சு பாதம்
அதிலும், அந்த குழந்தை எழுந்து வெளியில் போய் எதையும் இவர்கள் உறவு பற்றி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, அந்த பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்துள்ளான் இந்த கயவன். இதைதவிர அடித்து நொறுக்குவதும் நடந்துள்ளது. இவ்வளவும் விசித்திரா கண்முன்னேதான் நடந்துள்ளது. விஷயம் எப்படி வெளியே வந்தது என்று தெரியவில்லை.. போலீசாரின் காதுகளுக்கு தகவல் போனதும் விரைந்து வந்தனர்.

உறுப்புகளில் ரணம்
இந்த ஜோடியை குண்டர் சட்டம் & போக்சோ சட்டங்களில் கைது செய்துவிட்டனர். இப்போது விசித்திரா - உதயகுமார் சிறையில் உள்ளனர். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே டாக்டர்கள் மிரண்டு போய்விட்டனர். உடலில் ஒரு உறுப்பை கூட அந்த உதயகுமார் விட்டு வைக்க காணோம். எல்லா இடங்களிலும் காயங்கள், ரத்தம், புண், சீழ், ரணங்கள் இருந்ததை கண்டு கலங்கி விட்டனர் ஆஸ்பத்திரி தரப்பினர்.

அதிர்ச்சி
எத்தனையோ பேர், நாட்டில் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து கிடக்கும்போது, இப்படி ஒரு பிஞ்சுவை நாசமாக்கிய இந்த ஜோடியை நினைத்து தமிழக மக்கள் உறைந்து உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications