மானேஜருக்கு கத்தி குத்து.. பெண்ணிடம் 10 சவரன் சங்கிலி பறிப்பு... சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர், மானேஜரைக் கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்த பெண் ஒருவரிடமிருந்து 10 சவரன் தங்க செயினையும் அந்த கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மானேஜரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசில் சிக்காமலிருக்க, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் கொள்ளையர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications