ம.ந.கூட்டணியின் 'தேர்தல் முடிவு' சந்தேகத்தை ஏற்படுத்துகிறது... தமிழிசை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி என மூன்று தொகுதிகளுக்கு அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாததன் மூலம், அவர்கள் வேறு ஏதோ ஒரு கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அடிப்படை கட்டமைப்பை நாங்கள் பலப்படுத்தி வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications