விபத்தில் பள்ளி மாணவி பலி... ஆத்திரத்தில் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கிய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே கோடங்கிபட்டியைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி நித்யா. வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்த நித்யா மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கினர். பின்னர் தேனி- போடி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை மூலம் மக்களை கலைந்து போகச் செய்தனர். இப்போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications