கொந்தளித்த விழுப்புரம்- ரயில்வே கேட் பலகையில் 'தமிழ்' நீக்கம்- 'தெலுங்கு' மொழியில் எச்சரிக்கை பலகை!
விழுப்புரம்: இந்தி திணிப்பு விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் விழுப்புரம் ரயில்வே கேட்டில் 'தெலுங்கு' மொழியில் பலகை வைக்கப்பட்டிருந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொள்கிறது என்பது தமிழ்நாட்டின் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும் திமுக கூட்டணி கட்சிகளும் இதனை கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டு பெண்ணிடம் இந்தி கற்றாக வேண்டும் என பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வலியுறுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் மூத்த திமுக தலைவர் கனிமொழியிடம் இதேபோல இந்தியில் பேச பாதுகாப்பு படையினர் வலியுறுத்தினர். அப்போது பிரச்சனை பூதாகரமாக வெடித்து இந்தி தெரியாது போடா என்ற பிரசார இயக்கம் உருவெடுத்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் விழுப்புரம் அருகே ரயில்வே கேட் பலகையில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையாகவும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பொதுவாக ரயில்வே கிராசிங்குகளில் உள்ள கேட்களில் நில் என தமிழிலும் இந்தி, ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட்டில் தமிழுக்குப் பதில் தெலுங்கு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதேபோல இந்தி மற்றும் ஆங்கிலத்தில் STOP என எழுதப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியில் ரயில்வே கேட் பலகையில் எதற்காக தெலுங்கு மொழியில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்ப இந்த விவகாரம் காட்டுத் தீ போல பரவியது.
இதனால் விவகாரத்தை உடனே முடிவுக்கு கொண்டு தெலுங்கு எழுத்துக்கு மேல் கையால் "நில்" என்ற வாசகத்தை எழுதி ஒட்ட வைத்தது ரயில்வே நிர்வாகம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications