ஜீ இருக்கிற வரை ஜீபூம்பா மாதிரி.. கேட்டதெல்லாம் கிடைக்கும் – சி.வி.சண்முகம்
விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் திமுகவின் அதிரடி மூவ்களாலும், உள்கட்சி பிரச்சனைகளாலும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறார்கள். அதிமுக அவர்களின் சக்தியை விட, பாஜகவின் அதிகாரத்தைத்தான் பெரியளவு நம்பியுள்ளனர். ஜீ இருக்கிற வரைக்கும் ஜீபூம்பா போல நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று அதிமுக மூத்த தலைவர் சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மோடி எங்கள் டாடி மாதிரி என்று சொன்னதில் தொடங்கி அதிமுகவினர் மோடியை வாழும் எம்ஜிஆர் போல போற்றி வருகிறார்கள்.

கல்வி கடன் [CV Shanmugam]
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், "உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக வங்கியில் கடன் வாங்கிறார்கள். டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்பதற்காக கடன் வாங்கினீர்கள். ஸ்டாலின் என்ன சொன்னார். கடந்த 2021 தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து செய்வேன் என்றார். செய்துவிட்டாரா. 5 வருடங்களாகிவிட்டது. அவர் சொன்னதை செய்யவில்லை.
கடன் எல்லாம் ரத்து செய்ய முடியாது. அதுவே பச்சை பொய்யான வாக்குறுதி. யார் வங்கியில் கடன் வாங்கினாலும் அதை கட்டித்தான் ஆக வேண்டும். அரசாங்கமே கடன் வாங்கினாலும் திரும்ப செலுத்தித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எடப்பாடியார் உண்மையான வாக்குறுதியளித்துள்ளார். நான் முதலமைச்சரானால் உங்கள் குழந்தைகள் வங்கியில் வாங்கிய கடனை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.
ஜீ இருக்கிற வரை
அப்படி என்றால் என்ன.. அரசாங்கமே வங்கியில் உங்கள் கடனை கட்டும். தமிழ்நாடு அரசு உங்கள் கடனை ஏற்கும். நாங்கள் கட்டுவோம். எங்களால் கட்ட முடியும். ஏன் தெரியுமா. எங்கள் கூட்டணியில் யார் இருக்கிறார்கள். இந்திய நாட்டின் பாரத பிரதமர் ஜீ உட்கார்ந்திருக்கிறார். ஜீ இருக்கிற வரை ஜீபூம்பா மாதிரி தமிழகத்திற்கு எல்லாமே நடக்கும். நரேந்திர மோடி எங்களுடன் இருக்கிறார்.
அவர் இந்திய நாட்டின் பிரதமர். ஒரு பிரதமர் நினைத்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் வழங்க முடியும். அனைத்துத் திட்டங்களையும் தர முடியும். அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நாம் கேட்டு பெற முடியும். கல்வி, வேலை வாய்ப்பைப் பெற முடியும். ஜீ இருக்கிற வரைக்கும் ஜீபூம்பா போல நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும்" என்றார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications