''காலில் விழுந்து ஆட்களை கூட்டிட்டு வாங்க''! காலி சேர்களை நிரப்ப கூவிக் கூவி அழைத்த பாஜக நிர்வாகி!
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திற்கு போதிய ஆட்கள் வராததால் காலியாக இருந்த நாற்காலிகளை பார்த்து பதறிப்போன நிர்வாகி ஒருவர், ''காலில் விழுந்து ஆட்களை கூட்டிட்டு வாங்கப்பா'' என ஓபன் மைக்கிலேயே கமென்ட்ரி கொடுத்து கூவிக் கூவி அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்தும் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக நாற்காலிகள் அனைத்தும் காலியாக கிடந்ததை பார்த்து பதறிப்போன பாஜக மாவட்ட தலைவர், ''ஏம்பா ஆட்களை அழைச்சிட்டு வாங்க, காலில் விழுந்தாவது பின்னால் நிற்பவர்களை சேர்களுக்கு அழைத்து வாங்க'' என பரிதாபமாக கூவிக் கூவி அழைத்ததை காண முடிந்தது.

''சேர் காலியாக இருப்பதை படம் பிடிக்கிறாங்க, பாஜக சொந்தங்களே வாங்க, ஏங்க நின்று கொண்டிருக்கீங்க, கொஞ்சம் எல்லாரையும் கூப்பிடுங்கப்பா, காலில் விழுந்தாவது கூட்டிட்டுங்க வாங்கப்பா, பேச ஆரம்பிச்சுடாங்க, சொல்லிகிட்டே இருக்கிறேன், ஏன் இன்னும் உட்காரமா நிற்கிறீங்க'' என விழுப்புரம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் ஓபன் மைக்கிலேயே அழைப்பு விடுத்தார். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் அழைத்து வரப்பட்டு சேர்கள் நிரப்பப்பட்டதை தொடர்ந்து ''ம் பேசுங்க'' என மேடையில் பெண் நிர்வாகி ஒருவரை பேச அழைத்தார்.
இதனிடையே பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஆட்கள் வராததை படம் பிடித்த பத்திரிகையாளர்களிடம் அதனை ஒளிப்பரப்பக் கூடாது என பாஜக மாவட்டத் தலைவர் தர்ப்பு வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவிற்கு இவ்வளவு தான் விழுப்புரத்தில் மவுஸா என விழுப்ப்புரம் திமுக, அதிமுகவினர் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நமீதா கலந்துகொள்வதாக இருந்தும் கூட்டத்திற்கு ஆட்கள் திரளவில்லை என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது. இதன் மூலம் விழுப்புரத்தில் குறிப்பாக வடக்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications