கண்ணீர் மல்க கஷ்டங்களை கூறிய மூதாட்டி! பட்டுப் புடவையை பரிசாக அளித்த சசிகலா! அரசியல் பயணம் ருசிகரம்!
விழுப்புரம்: தன்னிடம் கண்ணீர் மல்க கஷ்டங்களை கூறிய மூதாட்டி ஒருவருக்கு, பட்டுப் புடவையை பளிசாக கொடுத்திருக்கிறார் சசிகலா.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தம்பாக்கத்தில், அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மத்தியில் வேனில் இருந்தபடி சசிகலா நேற்றிரவு உரையாற்றினார்.
அப்போது தான் இப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் பட்டுப்புடவையை பரிசாக தந்த ருசிகர நிகழ்வு நடந்துள்ளது.

புரட்சிப் பயணம்
சசிகலா மீண்டும் தனது அரசியல் புரட்சிப் பயணத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலா என்னதா பேசுகிறார் என பார்ப்போம் என்று அவர் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் கூட அதிகளவில் திரள்கின்றனர். இதேபோல் கட்சி அடையாளங்கள் இல்லாமல் மாற்றுக்கட்சியினரும் சசிகலாவை காணவும் அவர் பேச்சை கேடக்வும் அதிகளவில் குழுமுகின்றனர்.

மூதாட்டி கண்ணீர்
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் சசிகலா, நேற்றிரவு வானூர் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தம்பாக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசி முடித்துவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரான சசிகலா அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணீர் மல்க தனது கஷ்டங்களை கூறினார். நூறு நாள் வேலை திட்டத்தால் பிழைப்பு நடத்தி வருவதாக கூறினார்.

சசிகலா இரக்கம்
மூதாட்டியின் கஷ்டத்தை கேட்டு இரக்கப்பட்ட சசிகலா தனது வேனில் இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை ஒன்றை எடுத்து அவருக்கு பரிசாக கொடுத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அதை தொலைக்காட்சி வழியாக பார்த்தவர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்திருக்கிறது. இன்னும் போக போக சசிகலா இது போன்று பல பரிசுகளை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாக்லெட்கள்
இதேபோல் தனது வாகனம் நிறைய டெய்ரி மில்க் சாக்லெட் பாக்ஸ்களை வாங்கி குவித்து வைத்துள்ள சசிகலா, வழியில் சந்திக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு அதனை கொடுத்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications