உக்காந்து யோசிப்பாங்களோ! விக்கிரவாண்டி தேர்தலில் வித்தை காட்டும் வேட்பாளர்கள்! கழுத்து நிறைய பணம்..!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளே சுயேச்சைகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் மன்னன் பத்மராஜன் தொடங்கி கழுத்து நிறைய பண மாலை, ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு மாலை என நூதன முறையில் வந்து தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது தான் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி புகழேந்தி காலமானார். அவரது மரணத்தை தொடர்ந்து அந்த தகவலை தமிழ்நாடு சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது
தேர்தல் ஆணையம்: ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் ஏழாம் கட்ட தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி: அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளே சுயேச்சைகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் யாரும் வேட்பமனு தாக்கல் செய்யவில்லை. வரும் நாட்களில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக, பாமக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வேட்புமனு தாக்கலை முன்னிட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 100 மீட்டர் பகுதிக்குள் ஐந்து பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் விதிமீறல்கள் ஈடுபடுவதை தடுக்க தேர்தல் நடக்கும் நடைபெறும் காவல்துறையினரும் தாலுகா அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
இதனால் அந்த பகுதியே களைகட்டி காணப்பட்டது. நேற்று காலை 11 முதல் மாலை 3 மணி வரை 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் நாளிலேயே யார் முதலில் மனு தாக்கல் செய்வது என அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சேலம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் வார்டு தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் 242வது முறையாக விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
241 தேர்தல்களில் வெற்றி பெறாமல் தோல்வியடையடைந்துள்ள நிலையில், இந்த தோல்வியடைந்து கின்னஸ் சாதனை படைக்கப் போகிறேன் எனக் கூறியிருக்கிறார். முன்னதாக திருச்சியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனராக இருந்த ராஜேந்திரன் ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு உள்ளிட்டவர்களை மாலையாக அணிந்து வந்து தான் டிஜிட்டல் முறையில் தான் டெபாசிட் பணம் செலுத்துவேன் என கூறினார். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் டெபாசிட் தொகையை செலுத்தாமல் வேட்பு மனுவை மட்டும் அளித்து விட்டு சென்றார்.
இதேபோல் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் மகாத்மா காந்தியைப் போல கதர் ஆடையை அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரும் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் தன்னுடைய கழுத்து நிறைய 500, 200 ரூபாய் முதல் 100 50 20 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்தவாறு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். கழுத்து நிறைய கலர் கலர் பண மாலையோடு வந்தவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து வேட்புமனுக்கான டெபாசிட் தொகையை சில்லரை நாணயங்களாக கொடுத்தார். தொடர்ந்து அதனை 10 அதிகாரிகள் எண்ணினர். இப்படியாக முதல் நாள் வேட்பு மனு தாக்கல் ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications