எந்த துறையாக இருந்தாலும் களை எடுக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. விழுப்புரத்தில் என்ன செய்தார் தெரியுமா?
நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
விழுப்புரம்: நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான் என கூறி வயல்வெளிகளில் இருந்த பார்த்தீனிய செடிகளை கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் களையெடுத்தார்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்தவர் ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தார்.
அது போல் நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த போது 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளை தனது சொந்த செலவில் காப்பகத்தில் சேர்த்து பராமரித்து வருகிறார்.

கல்வி வேலைவாய்ப்பு
அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் ஆகியவற்றில் உதவி வருகிறார். அந்த குழந்தைகள் ராதாகிருஷ்ணனை அப்பா என்றும் அவரது மனைவியை அம்மா என்றுமே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு தாய், தந்தை இல்லாத வெறுமையை இவர்கள் போக்கி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் ராதாகிருஷ்ணனே சுகாதாரத் துறை செயலாளராக இருந்து கொரோனா 2ஆவது அலையை சாதுர்யமாக எதிர்கொண்டார்.

கூட்டுறவு துறை
இதையடுத்து அவர் கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். எந்த துறைக்கு சென்றாலும் ராதாகிருஷ்ணன் அதிரடி மக்கள் பணியை ஆற்றுவதில் வல்லவர். ரேஷன் கடைகளுக்கு அவ்வப்போது ரெய்டு, பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என சோதிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார். ரேஷன் பொருள்கள் கடத்தலை தடுக்கவும் தீவிரம் காட்டி வருகிறார்.

விழுப்புரம்
அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது திடீரென வயல்வெளிகளில் இறங்கிய செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்த பார்த்தீனிய செடிகள் பயிர்களை வளரவிடாமல் அழிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

விவசாயம்
எனவே பார்த்தீனிய செடிகள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய அவர் நானும் ஒரு விவசாயி குடும்பம்தான் என கூறிக் கொண்டே பார்த்தினீய செடிகளை களையெடுத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேவைக்கேற்ப 3500 நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக முதல்வர் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார்.

12 ஆயிரம்
கூட்டுறவு வங்கிக் கடன் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் வழங்க இலக்கை எட்டிவிட வேண்டும். 13 லட்சம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. தேசிய திட்டத்தில் 1.14 கோடி குடும்ப அட்டைகளும் 2.64 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுவிட்டது. 14.54 லட்சம் குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பித்துள்ளனர். லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி
இலவச ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 11,166 வழக்குகள் 15278 பேர் கைது செய்யப்பட்டனர். 135 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குகள் குறைவாக போட்டாலும் அரிசி கடத்தலுக்கு மூளையாக இருப்பவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் மத்திய குழு தமிழகத்திற்கு வந்து 10 மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.
-
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications