டாக்டர்..ஸ்போர்ட்ஸ் வுமன்..! விக்கிரவாண்டியில் களமிறங்கும் நாம் தமிழர் அபிநயா! பாமகவுக்கு ஜெர்க்
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக முதுகலை ஓமியோபதி மருத்துவரான அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அபிநயா யார்? சீமான் அவரை தேர்தெடுக்க என்ன காரணம்? என பார்க்கலாம்..
விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வனுக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச் செல்வன் 2021 தேர்தலில் புகழேந்தி இடம் தோல்வி அடைந்தார். புகழேந்தி 93 ஆயிரத்து 730 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளை பெற்றிருந்தார். வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் புகழேந்தி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தற்போது முத்தமிழ்ச் செல்வன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமகவும் இந்த தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போதைய சூழ்நிலையில் மும்மனைப்போட்டி நிலவுகிறது. அதாவது இதுவரை தமிழகத்தில் தனித்தே களம் கண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்குவதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் உறுதி செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அவரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபிநயா போட்டியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 65 ஆயிரம் வாக்குகளை பெற்று டெபாசிட்டை பறி கொடுத்திருந்தார். விழுப்புரத்தை சொந்த ஊராகக் கொண்ட அபிநயா ஹோமியோபதி மருத்துவராக இருக்கிறார். இருந்தும் சௌமியா அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட நிலையில் வன்னியர் வாக்குகளை குறி வைத்தே அங்கு அவர் களமிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தேர்தலில் டெபாசிட் போனாலும் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணியின் வாக்குகளை பெரிய அளவில் பிரித்திருந்தார். சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் சௌமியா அன்புமணி தோற்றது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் அருகே உள்ள பில்லுரை சேர்ந்த அபிநயா சிறந்த விளையாட்டு வீரர் என்பதோடு தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
28 வயதே நிரம்பிய அவர் மேடைகளிலும் அரசியல் விவாதங்களிலும் பங்கேற்று இருக்கிறார். அவரது கணவரான பொன்னிவளவன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் தான். தொடர்ந்து சீமானின் பேச்சால் கவரப்பட்டு தேர்தல் அரசியலில் வந்திருக்கும் அபிநயா தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications