என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்.. பாமகவில் என்னிடமே அதிகாரம் இருக்கு.. ராமதாஸ் அறிவிப்பு!
விழுப்புரம்: என்னுடன் இருப்பவர்களுக்கே சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாக கூறிய ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் பாமக போட்டியிடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்திற்கு வந்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் பாமக தலைவர் பொறுப்பை தாமே எடுத்து கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.

புதிய நிர்வாகிகள்
அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்த அவர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளையும் மாற்றினார். இதுவரை மொத்தமாக 78 புதிய மாவட்டச் செயலாளர்களையும், 61 புதிய மாவட்ட தலைவர்களையும் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். இன்னொரு பக்கம் அன்புமணி மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறார்.
ராமதாஸ் ஆலோசனை
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாமகவில் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் சிலரை அறிமுகம் செய்ததோடு, பாமகவின் இணை பொதுச் செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை நியமனம் செய்து அறிவித்தார்.
ராமதாஸ் பேட்டி
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு நடக்கவுள்ளது. அதனை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இந்த கூட்டம் நடைபெற்றது.
அருளுக்கு பதவி
பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி எம்எல்ஏ அருளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்துள்ளோம். எப்போதும் என்னுடன்தான் இருப்பார். அதேபோல் பாமக எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு தான் பாமக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.
தேர்தலில் சீட் யாருக்கு?
அவர்களுக்கே சீட் வழங்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான, சிறந்த, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பாமகவில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கே உள்ளது. கூட்டணி தொடர்பாக எதுவும் அதிகமாக சொல்ல முடியாது. பெரியார், அண்ணா ஆகியோரை வீடியோ வெளியிட்டது தவறு என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications