கட்டுப்படாத அன்புமணி.. நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம்.. பாமக செயற்குழுவில் வேட்டு!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பதும், நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் பாமக நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதும் என்று மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாமகவில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுடன் ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

செயற்குழுவில் ராமதாஸ் மகள்
இந்த செயற்குழு கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜிகே மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், இணை பொதுச்செயலாளர் அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் 11.30 மணியளவில் கூட்ட அரங்கிற்குள் வந்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதியும் பங்கேற்றார்.
அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் பேச்சு
தொடர்ந்து ராமதாஸ் பேசுகையில், நமக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. வெற்றி வாய்ப்பு உள்ள நிர்வாகிகள், தங்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாக வேண்டும். அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. அதனை சந்திக்க உள்ளோம்.
ஏ ஃபார்ம், பி ஃபார்ம்
சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கொடுத்து கையெழுத்து போடுவது நான்தான். அடுத்த நடக்கவிருக்கும் மகளிர் மாநாட்டில் குறைந்தது 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்கள். 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மாநாடு என்பதால், மாநில மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
2ஆக பிரியும் பாமக?
சில நாட்களுக்கு முன்பாக ராமதாஸின் அறிக்கையில் இருந்துவந்த அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. தற்போது பாமக செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, பாமக இரண்டாக பிரியுமோ என்ற குழப்பம் நிர்வாகிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications