உதயநிதி பிறந்த நாளுக்கு இலவச தக்காளி.. முண்டியடித்த பொதுமக்களால் டிராபிக் ஜாம்.. போலீசார் குவிப்பு
விழுப்புரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி, வெங்காயத்தை வாங்கப் பொதுமக்கள் முண்டியடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தக்காளி விலை
இப்படித் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி வரத்து குறைந்தன. இதனால் பல பகுதிகளிலும் காய்கறி விலை அதிகரித்தது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தக்காளி விலை 150 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரூ 100 கடந்து தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் தக்காளி, வெங்காயத்தைத் திருமண பரிசாக வழங்குவது, நிவாரண பொருட்களாக வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

உதயநிதி பிறந்தநாள்
திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று காலை அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற உதயநிதி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ரசிகர் மன்றம் சார்பிலும் திமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறனர்.

தக்காளி, வெங்காயம்
அதன்படி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளி மற்றும் ஒரு கிலோ வெங்காயம் வழங்கினர். கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தக்காளி மற்றும் வெங்காயத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.

போலீசார் குவிப்பு
இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி வெங்காயத்தைப் பெற அங்குப் பொதுமக்கள் அலைமோதியதால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி. இருப்பினும், அங்கு அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications