வெலவெலக்குதே.. கத்த கூட முடியாதாம்.. கட்டிவைத்தே பலாத்காரம்.. விழுப்புரம் ஆசிரமம் ஓனர் "அன்பு" கைது
விழுப்புரம் அருகே அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தின் ஓனர் அன்பு ஜூபின் தற்போது கைதாகி உள்ளார்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி அன்பு ஜுபின் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டவர்களை, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அன்பு ஜுபினும் கைதாகி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ளது குண்டலபுலியூர்.. இங்கு அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆசிரமத்தின் பிரதான பணி என்னவென்றால், சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மாமனார்
அதனால்தான், இதையெல்லாம் கேள்விப்பட்டு சலீம் என்பவர், தன்னுடைய மாமனாரை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்... கடந்த ஆகஸ்ட் மாதம் வந்து, மாமனார் எங்கே என்று கேட்டதற்கு, ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை என்பதால், 53 பேரை பெங்களூருவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பிவிட்டோம் என்றார்களாம்.. அதனால் பெங்களூர் சென்று பார்த்தால், அங்கேயும் மாமனாரை காணவில்லை.. மாமனாருடன் சேர்த்து 16 பேரும் அந்த ஆசிரமத்தில் காணாமல் போயிருந்தனர்.. அதனால் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் சலீம்..

லைசென்ஸ்
இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகள் சென்றபோதுதான், மற்ற பகீர் தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் சோதனை நடத்தியபோது, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த அன்பு ஜோதி ஆசிரமம் 17 வருடங்களாக இயங்கி வருகிறாம்.. 17 வருடங்களாகவே லைசென்ஸ் கிடையாதாம்.. மேலும், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உரிய முறையில் பரமாரிக்கப்படாமல் சங்கிலியால் கட்டப்பட்டு சித்வதை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்..

குதறிய குரங்குகள்
மேலும், இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இங்கு தங்கி இருப்பவர்களை, இந்த குரங்குகள் கடித்து குதறியும் வந்திருக்கிறது. ஜன்னல் கம்பிகளில் சங்கிலியால் கட்டிப்போட்டு, போதை பொருளை தந்து பலாத்காரம் செய்துள்ளனர்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இந்த பெண்களுக்கு ஏற்பட்டுள்ளன.. இந்த ஆசிரமத்தின் ஓனர் ஜுபின், நிறைய குரங்குகளை வளர்த்து வந்துள்ள நிலையில், சமீபத்தில் அதில் 2 குரங்குகளை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த குரங்குகள் ஆசிரமத்திலிருந்த 10 பேரை கடித்திருக்கின்றன.. இதனால் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் உட்பட பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.. குரங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் சிகிச்சையும் தந்துள்ளனர்.. எனினும், குரங்குகளால் தாக்கப்பட்டு பல உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் தற்போது கிளம்பி உள்ளது.

குரங்கு கடிகள்
ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்... பெண்கள் பலர் போதை மருந்து கொடுத்தே பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்களாம்.. இதுகுறித்த புகார்களும் போலீசுக்கு வந்துள்ளன.. இந்த ஆசிரமத்தில் மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்றோரின் உடல்களில் காயங்கள் தடிப்பு தடிப்பாக இருந்துள்ளன. இவைகளை எல்லாம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... ஆசிரமத்தில் இருந்து இப்போதைக்கு 142 பேரை மீட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்தவர்களில் 86 பேர் சிகிச்சை முடிந்து வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

சிகிச்சை
இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. இந்த ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆதரவற்ற பெண்களை சிகிச்சைக்காக அழைத்து செல்கிறோம் என்று சொல்லி, பாண்டிச்சேரிக்கு கூட்டிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.. 10 வருடமாகவே, எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்துள்ளது இந்த ஆசிரமம்.. இங்கு இருந்தவர்கள் இறப்பு மற்றும் எத்தனை நபர்கள் பராமரிக்கப்பட்டார்கள் என்பது குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அன்பு ஜூபின்
அனுமதி பெறாமல் இயங்கி வந்த தனியார் ஆசிரமத்தை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் பொிதான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேரடியாகவே வந்து புகார் தந்தார்.. அந்த புகாரின்படி, ஆசிரம உரிமையாளர் உட்பட 8 பேர்மீது சுமார் 12 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, 4 பேர் (பிஜ் மோகன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன்) கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தகவல் வெளியான நிலையில், ஆசிரமத்தின் உரிமையாளர் அன்பு ஜுபின் உள்பட 6 பேர் மீது போலீசார் 17 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.. இந்நிலையில், ஓனர் அன்பு ஜுபின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

குரூர ஓனர்
இந்நிலையில், இந்த ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.. அதில், 2019-ல் விழுப்புரம் வந்தபோது, யாரோ ஒருவர் அடைக்கலமின்றி நான் தனியாக இருப்பதை கவனித்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் விட்டு சென்றார்.. ஆசிரமத்தில் சமைக்கும் வேலைகளை செய்வேன், வேலை செய்ய தாமதமானால் ஆசிரமத்தின் ஓனர் ஜூபின் மற்றும் அவரது மனைவி மரியா, மேலும் அங்கு வேலை செய்பவர்கள் தன்னை தனி அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவார்கள். நிறைய பேர் அடிக்கடி மாயமாகிவிடுவார்கள்.. பாலியல் வன்கொடுமைக்கும் நான் ஆளேகி உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

வானூர்
இப்படி ஒரு பரபரப்பு தமிழக மக்களிடம் அதிர்ச்சியை தந்து வரும்நிலையில், நேற்றைய தினம் இன்னொரு ஆசிரமத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. அதாவது, வானூர் அருகே புளிச்சபள்ளம் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகளுக்கான கருணை இல்லத்தை நேற்று மாலை 5 மணி அளவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் தங்கவேலு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்..

கருணை இல்லம்
அப்போது, 53 ஆண்கள், 39 பெண்கள் என மொத்தம் 92 பேர் அந்த கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 50 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.. ஆனால், விசாரணையின்போது, கருணை இல்ல நிர்வாகிகள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லையாம்.. எனவே, விசாரணை இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை களைய வேண்டு என்பதால்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்..

ஸ்பெஷல் டீம்
அதன்படி, ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்முறைகள் குறித்தும், காணாமல் போயுள்ளவர்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு விசாரணை அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு சிறப்புக்குழுவை ஏற்படுத்தி முறைப்படுத்திட வேண்டும்" என்றும் மிக அவசியமான கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications