டிரஸ்ஸே இல்லாமல்.. சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்.. 17 வயது சிறுவனின் கோரம்.. விழுப்புரத்தில்!

17 வயது சிறுவன், பெண்ணை கல்லால் அடித்து கொன்றுள்ளான்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "ஜாலியாக இருக்க 50 ரூபாய் தந்தேன்.. ஆனால் அந்த பெண் 500 ரூபாய் கேட்டார்.. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றதும், உல்லாசத்துக்கு மறுத்தார்.. அதனால் கல்லை தூக்கி போட்டு கொன்றுவிட்டேன்" என்று 35 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி குவார்ட்டர்ஸ் பகுதியில் நிறைய பாழடைந்த வீடுகள் உள்ளன... இங்கு கடந்த 14ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.. அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.. மிக கோரமான முறையில் அவரை கொலை செய்திருந்தனர்.

vizhupuram woman murder by 17 year old boy

இரவு நேரம் அந்த பக்கம் போனவர்கள், சடலத்தை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர்.. தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண்ணுக்கு வயது சுமார் 35 இருக்கும்.. உடம்பில் டிரஸ் இல்லை.. அவரது முகத்தைதான் அதிகமாக கல்லால் நசுக்கி கொன்றிருந்தனர்.

இதையடுத்து, கொலை சம்பந்தமான விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனின் பெயர் அடிபட்டது.. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், சிறுவனை பிடித்து விசாரித்தனர்.. அப்போது இன்னும் ஷாக் ஆகிவிட்டனர்... அந்த சிறுவன் தந்த வாக்குமூலத்தில்: "நான் ரயில்வே ஸ்டேஷனில் கேன்டீனில் வேலை பார்க்கிறேன். ஸ்டேஷனுக்கு வந்து போகும் பயணிகளிடம் டீ விற்று வருகிறேன்.

இதே ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் பிச்சை எடுப்பார்.. பிளாட்பாரத்தில்தான் தங்கியிருப்பார்.... நைட் நேரம் ஆனால், காசு கொடுத்து அந்த பெண்ணை உல்லாசத்திற்கு சிலர் அழைத்துபோவார்கள்.. இதை பார்த்த எனக்கும் அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசைவந்துவிட்டது.. அதனால் என் கையில் இருந்த பணத்தை பெண்ணுக்கு காட்டி, பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ் பகுதிக்கு கூட்டிட்டு வந்தேன்... என்கிட்ட இருந்த 50 ரூபாயை எடுத்து தந்தேன்.

ஆனால் 500 ரூபாய் வேண்டும் என்று அவர் சண்டை போட்டார்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னதும், உல்லாசத்துக்கு மறுத்தார் அநத் பெண்.. பணம் என்னிடம் இல்லை என்று தெரிந்துகொண்ட பிறகு, "நீ சின்ன பையனா இருக்கே.. உன் அப்பா, அம்மா, போலீஸ்கிட்ட சொல்லிடுவேன்' என்று என்னை மிரட்டினார்.. குவார்ட்டர்ஸ் வரை வந்துவிட்டு, இப்படி பேசியதால் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

அதனால், கீழே கிடந்த கல்லை எடுத்து பெண்ணின் முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 35 வயது பெண்ணை சிறுவன் ஒருவன், விபரீத காரணத்துக்காக கொலையே செய்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+