"கட்டிலுக்கு அடியில்".. திடீர்னு பெட்ரூமில் நுழைந்த கணவன்.. பதறிய மனைவி.. அப்பறம் என்னாச்சு..?
கள்ளக்காதல் ஜோடியை கத்தியாலேயே குத்தி தாக்கிய கணவன் கைதாகி உள்ளார்
விழுப்புரம்: கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவியை கத்தி எடுத்து குத்திதாக்கிய, கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்..!
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒரு எல்லையே இல்லாமல் ஊருவிட்டு, மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு, நாடு விட்டு, நாடு கடந்து போய் கொண்டிருக்கிறது..!
எத்தனையோ சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு ஏராளமான பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன..

கள்ளக்காதல்கள்
இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமலே அக்கிரமம் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்தும் அநியாயங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பிரதான இடத்தில் இருப்பது கள்ளக்காதலால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள்தான்.. பெற்ற குழந்தைகளை கொல்வதும், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வதும் என, பெண்களே இத்தகைய கொடூரங்களில் இறங்கி வருகின்றனர்.. சில இடங்களில், மனைவியின் கள்ளக்காதலை ஜீரணிக்க முடியாமல், உச்சக்கட்ட ஆத்திரத்துக்கும் கணவன்கள் சென்றுவிடுகிறார்கள்.

நாகமணியின் கணவன்
2 நாளைக்கு முன்பு ஆந்திராவில் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த நபர் பெயர் ரமேஷ்..மனைவி பெயர் சல்லா நாகமணி 28 வயதாகிறது.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. ஆனாலும், நாகமணிக்கு இளைஞர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.. இதை இவர்கள் வீட்டில் இருக்கும்போது, கணவர் வந்துள்ளார்.. அப்போது நாகமணி, கள்ளக்காதலனை கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டாராம்.. ஆனாலும், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த ஜோடி, கணவர் கண்ணெதிரே சிக்கிவிட்டது. இதனால், அதிர்ந்த கணவன், நாகமணியை ஒரு சேரில் கட்டிப்போட்டு, கிச்சனுக்கு போய் கத்தி எடுத்து வந்து சரமாரி குத்தி விட்டார்.. அதே சேரில் ரத்த வெள்ளத்தில் பிணமானார் மனைவி.

அருணா
இதுபோலவே, விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்... 35 வயதாகிறது.. வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. மனைவி பெயர் அருணா.. 28 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 10 வருடமாகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. ஜேம்ஸ் ஒரு டிரைவர் என்பதால், வேலை விஷயமாக தமிழகம் முழுக்க செல்ல வேண்டி இருக்கும்.. அதனால், பெரும்பாலும் வீட்டுக்கு வர முடியாமல் போயுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், அருணாவுக்கு அதே பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதல் அளவுக்கு வந்துவிட்டது.

ஜேம்ஸ்
ஜேம்ஸ் வெளியூர் என்றாலே இவர்கள் 2 பேருக்கும் குஷி..விக்ரம் - அருணா 2 பேருமே வீட்டில் ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.. ஆனால், ஒருநாள், இதை கண்ணெதிரே பார்த்துவிட்ட ஜேம்ஸ் அதிர்ந்து பேய்விட்டார்.. மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் அருணா எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. அப்போதுதான் ஜேம்ஸுக்கு ஒரு விஷயம் தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.. இந்த கள்ளக்காதல், திடீரென ஏற்பட்டதில்லையாம்..

எரிச்சல் - தகராறு
10 வருடங்களாகவே அதாவது இவர்களுக்கு திருமணம் ஆனதில் இருந்து, கள்ள உறவும் தொடர்ந்து வந்துள்ளது.. இதனால் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டார் ஜேம்ஸ். எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால், வீட்டில் தகராறும் வெடித்துள்ளது.. கணவர் இப்படி ஓயாமல் தொல்லை தரவும், கள்ளக்காதலனுடன் தன்னை சேர விடாமல் தடுத்து வரும் எரிச்சலிலும், கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார் அருணா.. 5 மாதத்துக்கு முன்பே செஞ்சி ராஜேந்திர நகரில் உள்ள அம்மாவின் வீட்டிற்கு வந்துவிட்டார்..

அருணா அட்டகாசம்
அங்கே, அம்மா வீட்டில் இல்லாத சமயங்களில், விக்ரமை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார் அருணா.. இப்படிப்பட்ட சூழலில்தான், மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரலாம் என்று ஜேம்ஸ் மாமியார் வீட்டுக்குள் நுழைந்தார்.. ஆனால், அங்கே விக்ரமையும், அருணாவையும் மறுபடியும் ஒன்றாக சேர்த்து பார்த்து கொந்தளித்துவிட்டார்.. உடனே கத்தியை எடுத்து, மனைவி, விக்ரம் மீது சரமாரியாக குத்தினார்.. இதில், அந்த ஜோடி நிலைகுலைந்து விழுந்தது..

செஞ்சி பரபரப்பு
அவர்களின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துவிட்டதால், ஜேம்ஸ்ஸால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.. பிறகு, படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்... ஆனால், சிகிச்சையில் இருந்தாலும், கள்ளக்காதலனை வெட்டிய ஜேம்ஸ் மீது அருணா செஞ்சி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் ஜேம்ஸ்ஸை கைது செய்துள்ளனர்.. விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. கள்ளக்காதல் ஜோடிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications