தலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்

பெண்ணை எரித்து கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: உடம்பெல்லாம் எரிந்த நிலையில் பிணமாக விழுந்து கிடந்த இந்திராவை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் படுதீவிரமாக இறங்கி உள்ளனர்.

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன். திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹெச்.எம்.ஆக வேலை பார்த்தவர்.. 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வும் பெற்றவர்.

இவரது மனைவி இந்திரா.. கல்யாணம் ஆகி 30 வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.. அதனால், திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை நடராஜன் 2-வதாக கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு வேலாயுதம் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

பணம்

பணம்

இந்திராவுக்கு இப்போது 56 வயதாகிறது.. சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இதை தவிர வட்டிக்கும் பணம் தந்து வந்தார். இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு, நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள லீலாவை பார்க்க சென்றார்.

எரிந்த சடலம்

எரிந்த சடலம்

பிறகு நேற்று காலை விழுப்புரம் வீட்டுக்கு திரும்பினார்.. அப்போது, இந்திரா பிணமாக கிடந்தார்.. அவரை யாரோ மிக கொடூரமாக எரித்துள்ளனர்.. எரிந்த நிலையில் மனைவி கிடப்பதை கண்டதும் நடராஜன் அலறினார்.. தகவலறிந்து விழுப்புரம் தாலுகா போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

இரும்பு கம்பி

இரும்பு கம்பி

உடம்பெல்லாம் எரிந்து கிடந்தாலும், இந்திராவின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இந்திரா இரும்புக்கம்பியால் தாக்கி, அதன்பிறகுதான் துணிகளை அவரது உடம்பில் போட்டு எரித்து கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டனர். இந்திராவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்ய முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்திராவை எரித்தது யார் என்று தெரியவில்லை.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அந்த பிரச்சனையில் யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளதுடன், கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+