நாளை லோக்சபா தேர்தல் முடிவு.. மனைவி வெற்றிக்காக சரத்குமார் செய்த செயல்.. என்னென்ன பண்றாங்க பாருங்க!
விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ள ராதிகாவின் வெற்றிக்காக அவரது கணவர் சரத்குமார் கோயிலில் அங்கபிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் அமைந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி சார்பாக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பாக விஜய பிரபாகரன் மற்றும் பாஜக சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார்.

இதன்பின்னர் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிலும் தந்தி டிவியின் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், தேமுதிகவின் விஜய பிரபாகரனுக்கு 26 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவின் ராதிகா சரத்குமாருக்கு 21 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் மனைவி ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டும் என்று நடிகர் சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்து கோயிலில் வழிபட்டுள்ளார். விருதுநகரில் உள்ள பிரபல கோயிலில் சரத்குமார் அங்க பிரஷ்டை செய்த போது, அவருடன் மனைவி ராதிகா சரத்குமாரும் உடனிருந்தார்.
அதன்பின் கோயிலில் வழிபட்டு இருவரும் புறப்பட்டனர். மனைவியின் தேர்தல் வெற்றிக்காக சரத்குமார் அங்கபிரதிஷ்டை செய்தது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அதேபோல் அங்கபிரதிஷ்டை செய்த வீடியோ சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகின்றன.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications