வெள்ளை வந்தே பாரத் ரயில் விருதுநகரில் ஏன் இப்படி நிக்குது? அதுவும் ஒரு மாதமாக? குழம்பிய பயணிகள்! ஓஹோ
விருதுநகர்: விருதுநகர்-திருநெல்வேலி -- சென்னை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை விருதுநகர் சந்திப்பிலும் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், மாவட்ட மக்களுக்கு நிம்மதியை தந்தது.. இந்நிலையில், மதுரை: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஒருமாதமாக வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பல தரப்பிலும் கேள்விகள், சந்தேகங்கள் எழுந்த நிலையில், ரயில்வே தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் ஜூலை 11 முதல் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் இயக்கப்படுகிறது.. அதாவது, எழும்பூரிலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு கிளம்பி மதியம் 1:50க்கு சென்றடையும், மறு மார்க்கமாக இரவு 11:00 நாகர் கோவிலிலிருந்து கிளம்பி மதியம் 2:20க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

நாகர்கோவிலுக்கு மட்டுமா?
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு செல்கிறது. ஆனால் இந்த ரயில் ஆரம்பத்தில் விருதுநகர் சந்திப்பில் நின்று செல்லாமல் இயக்க முடிவு செய்யப்பட்டது..
இந்த ரயிலில் பயணிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள், மதுரையில் இறங்கி அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.. இது விருதுநகர் மக்களுக்கு அதிருப்தியையும், அலைச்சலையும் உண்டுபண்ணியிருந்தது.
அண்ணாமலையிடம் கோரிக்கை
இதையடுத்து, மக்கள்நலன் கருதி விருதுநகர் சந்திப்பில் சிறப்பு வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் பாஜக மாநில தலைவரான அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்..
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.. தற்போது விருதுநகரிலும் வந்தே பாரத் நின்று செல்வது மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பயண நேரம் - மறுமார்க்கம்
அந்தவகையில் திருநெல்வேலி - எழும்பூர் இடையே 650 கி.மீ தூரத்திற்கு மதுரை வழியாக 2023 செப்., 24 முதல் வெள்ளை நிற வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. செவ்வாய் தவிர்த்து தினமும் காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் (20666) மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில் (20665), இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.
வீணாக ஏன் நிற்கிறது?
இந்நிலையில், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஒருமாதமாக வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.. இது பல தரப்பினருக்கும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தது. இப்படி வீணாக நிறுத்தியிருப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்கலாமே? என்றும் ஆதங்க கோரிக்கைகள் எழுந்தன.. இதற்குதான் தற்போது ரயில்வே தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
"திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்கனவே இயக்கப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 'ரேக்', ஸ்பேர் ரயிலாக மாற்றப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களில் 'ஆரஞ்சு' நிற வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஸ்பேர் ரயில்கள்
எனவே இந்த ஸ்பேர் ரயிலை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் ஏதேனும் ஒன்று பராமரிப்பில் இருந்தாலோ, தேவைப்படும் பட்சத்தில் சிறப்பு ரயிலாகவோ இயக்க முடியும்.
விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேர் ரயில் பெட்டிகள் தினமும் சிறிது துாரம் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மானாமதுரை அல்லது மதுரையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது" என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications