தமிழகத்தில் பாஜக காலூன்ற கார்ப்பரேட்கள் உதவி ! முழு பக்க விளம்பரத்தை கூறி வியந்த மாணிக்கம்தாகூர்!
விருதுநகர்: தமிழகத்தில் பாஜக காலூன்ற கார்ப்பரேட்கள் பொருளாதார ரீதியாக உதவிவருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தெரிவித்திருக்கிறார்.
மிகப்பெரிய பணபலத்துடன் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக துடித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அன்று அனைத்து நாளிதழ்களிலும் பாஜக முழு பக்கம் விளம்பரம் கொடுத்தது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருப்பதாக கூறினார்.

மதவெறி அரசியல்
தமிழகத்தில் மதவெறி அரசியலை திணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜக, நேற்று நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை பணம் கொடுத்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

பாஜக பின்னணியில்
பாஜகவின் பின்னணியில் உள்ள பணபலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் உதவியும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் பாஜக முழு பக்க விளம்பரம் கொடுத்தது தமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

பாஜக முயற்சி
பாஜக என்னதான் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டாலும் நாளை மறுதினம் வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் அவர்களின் பலம் தெரியவரும் என தெரிவித்தார் மாணிக்கம் தாகூர் எம்.பி. மேலும், மத்திய அரசின் அதிகாரத்தை நம்பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாகவும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பெற பாஜக துடித்து வருவதை அறியமுடிவதாகவும் அவர் கூறினார்.

பிரச்சாரம்
இதனிடையே திமுக, அதிமுகவுக்கு சளைக்காமல் மாநிலம் தழுவிய அளவில் அண்ணாமலை இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டதும் அதேபோல் விளம்பரம் விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் சரிக்கு சரியாக போட்டிபோட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications