விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு.. ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!
சாத்தூர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 18 பேர் இறந்த நிலையில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாராயணன் என்பவர் மரணமடைந்துள்ளார்.
Recommended Video

சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரிக்கு சொந்தமான அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்குகிறது இந்த ஆலை.

இங்கு 35-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் வழக்கம்போல் அந்த ஆலையில் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. அப்போது ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது.
தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது. இதனால் அநத 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்தின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 9 பேர் பலியாகிவிட்டனர். மேலும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாராயணன் மரணமடைந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் 29 பேரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர்களை 5 தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications