எந்த தொகுதியில் நின்றாலும் என்னுடைய வெற்றி உறுதி.. சாத்தூரில் விஜயபிரபாகரன் சொன்ன வார்த்தை!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன் என்று விஜயபிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட மக்கள் என்னை நம்புகிறார்கள் என்று கூறிய விஜயபிரபாகரன், தேமுதிகவுக்கு இது சிறந்த தேர்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 9ஆம் தேதியே கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசி வந்தார்.

ஆனால் திடீரென இன்னும் எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை.. நாம் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டை போல் விரைவாக அறிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி 2வது வாரத்தில் கூட்டணி அறிவிப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல் பாஜக எப்படியாவது தேமுதிகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.
ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் தேமுதிக நிர்வாகி சுதீஷ் கலந்து கொண்டார். அப்போது சுதீஷ் - நயினார் நாகேந்திரன் இடையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது சாத்தூரில் விஜயபிரபாகரன் பேசுகையில், 2024ல் இல்லையென்றாலும் 2026ல் நிச்சயம் வெல்வோம். தேமுதிகவுக்கு இது சிறந்த தேர்தலாக இருக்கும். சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் என்று ஒவ்வொரு தொகுதிக்கு செல்லும் போதும், அங்கு போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
விருதுநகரில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெல்வேன் என்று தெரியும். மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய முடிவு அல்ல.. கட்சியின் பொதுச்செயலாளர், மாவட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவாகும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக சரி செய்வோம். விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகளை, நாங்கள் நிச்சயம் செய்வோம்.
மீண்டும் விருதுநகர் வருவேன். இங்கு வரும் போது எனக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது என்று தெரிவித்தார். 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட விஜயபிரபாகரன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அவர் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications