Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டாசு ஆலை விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள்! பாதுகாப்பு விதிகளில் அதிகாரிகள் அலட்சியம்?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துக்களால் உயிர்கள் பறிபோகும் துயர நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன.

பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு வெடி விபத்துகளால் 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர நிகழ்வு நடந்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையடியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த துயரம் மறைவதற்குள் அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

Lives lost due to firecracker factory accident, Authorities negligence in safety rules?

அதிகாரிகள் அலட்சியம்: அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்களால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட பட்டாசு வெடி விபத்துக்கள் அனைத்து கடந்த ஒரு மாதத்திற்குள் நிகழ்ந்தது என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இது போன்ற நிகழ்வை விபத்து என்று இனி சொல்லக்கூடாது கொலை என்று தான் சொல்ல வேண்டும் என பாஜக கூறியுள்ளது. பட்டாசு ஆலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது.

பாதுகாப்பு விதிகளில் சமரசம்?: பாஜகவின் இத்தகைய குற்றச்சாட்டை புறந்தள்ளி விடமுடியாது. பட்டாசு ஆலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய பாதுகாப்பு அம்சங்கங்களையும், விதிமுறைகளை ஆலை அதிபர்கள் முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தான் உள்ளது. அவர்கள் இதுவரை தங்கள் கடமையை சரிவர செய்தார்களா என்பது இங்கு கேள்விக்குறியாகியுள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் கொத்து கொத்தாக பட்டாசு ஆலை வெடி விபத்துக்களால் உயிர்கள் போன பிறகு ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால் ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

கலெக்டர் விளக்கம்: இதனிடையே தமிழ்நாட்டிலேயே அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருவது விருதுநகர் மாவட்டத்தில் தான். அங்கு பட்டாசு ஆலை விபத்து என்பது தொடர்கதையாகி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை ஒன் இந்தியா தமிழிலிருந்து தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, ''விருதுநகர் மாவட்டத்தில் 1,085 பட்டாசு ஆலைகள் லைசென்ஸ் பெற்று இயங்கி வருகின்றன. அதேபோல் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என 3,000 பட்டாசு கடைகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. ஆலையில் வைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பேக் செய்ய வேண்டிய பட்டாசுகளை, தொழில் தெரிந்தவர்களை அழைத்து வந்து பட்டாசு கடைகளில் வைத்தே தெரியாமல் சிலர் பேக் செய்கிறார்கள்.''

கண்காணிப்புக்கு கூடுதல் டீம்: ''நேற்று நடந்து விபத்துக்கு காரணம் விதிமீறல் தான். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று கூட அனைத்து பட்டாசு ஆலை அதிபர்களையும் அழைத்து கடுமையான முறையில் வார்னிங் கொடுக்கவிருக்கிறோம். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இப்போது பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராயவும் கூடுதல் டீம் அமைக்கப்பட்டுள்ளது.''

35 ஆலைகளின் லைசென்ஸ் ரத்து: ''இனி கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்பதோடு விதிமீறலில் ஈடுபடுவது தெரிந்தால் உரிமம் ரத்து நடவடிக்கை தான். அதில் சமரசத்திற்கே இடமில்லை. இதுவரை 35 பட்டாசு ஆலைகளின் லைசென்ஸை ரத்து செய்திருக்கிறோம்.'' என்று விளக்கம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+