தரதரவென.. பெண் டிஎஸ்பி முடியை பிடித்து இழுத்த முருகேசன்.. மாவு கட்டு போட்ட போலீஸ்.. சம்பவம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது செய்யப்பட்டார். இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே நடந்த கொலையை கண்டித்து சாலை மறியலில் இந்த சம்பவம் நடந்தது. பெண் போலீசார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க விவாதங்களை சந்தித்து உள்ளது. இங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பிதான் தாக்குதலுக்கு உள்ளானார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதான காளி குமார் சரக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று தனது வாகனத்தில் திருச்சுழியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார். நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் காளி குமாரை திடீரென கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொன்றது.
கொலை செய்யப்பட்ட ஓட்டுநர் காளி குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்துள்ளனர். அப்போதுதான் இந்த மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை மறியலை கட்டுப்படுத்த சென்ற டிஎஸ்பி காயத்திரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது...
போராட்டக்காரர்கள் பெண் டிஎஸ்பி யின் தலைமுடியை பிடித்து இழுத்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கஷ்டப்பட்டு ஆண் போலீசார் சுற்றி நின்று அந்த பெண் அதிகாரியை காப்பாற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது தலை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த பெண் போலீஸ் அதிகாரியின் நெஞ்சு பகுதி மீதும் அவர்கள் கைவைத்து ரகளை செய்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது: ஏற்கனவே அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பியை தாக்கிய காளீஸ்வரன் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது செய்யப்பட்டார். இவர்தான் அந்த பெண் பொலிஸாரின் முடியை பிடித்து இழுத்தது.
பெண் என்பதால்.. அவரிடம் போய் முருகேசன் ஆணவமாக செயல்பட்டுள்ளார். பெண் போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். அதன்பின் போலீசார் கண்டிப்பாக கைது செய்வார்கள் என்று தெரிந்து தலைமறைவானார். இந்த நிலையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த முருகேசன் இன்று காலை கைது செய்யப்பட்டார். இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பி ஓட முயன்ற போது அவர் கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications