நயன்தாரா போலீசுக்கு போக போகிறார்.. "அவர்" உள்ளே போகப் போறார்.. குண்டை போட்ட ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: "மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் சொன்னதாவது:
"பூத் கமிட்டியில் எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். இரட்டை இலை படம், அம்மா படம், எம்ஜிஆர் படம், இபிஎஸ் படம், ஓபிஸ் படம் போட்ட அடையாள அட்டையை குத்திக்கிட்டுதான் எல்லாரும் ஓட்டு கேட்க வேண்டும்.. அதிமுக புலி வேட்டைக்கு போய்க்கொண்டிருக்கிறோம்.. திமுக எலி வேட்டைக்கு வருகிறார்கள்... நாம் அம்பை எடுத்து தொடுத்து வெற்றி பெற போகிறோம்.

இட ஒதுக்கீடு
ஸ்டாலின் என்னவோ முதலமைச்சர் மாதிரியே நடந்துக்கிறாரே.. மருத்துவ கல்லூரியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து சட்டத்தை இயற்றியது முதல்வரும், துணை முதல்வரும்தான்.. ஆனால், அதை ஸ்டாலின் தான் வாங்கி தந்த மாதிரி பேசுகிறார்.. இது சம்பந்தமாக ஒரு கோரிக்கை கூட வைக்காமல் வாயைக்கிட்டு இருந்து விட்டு இப்போ நடிச்சிட்டு இருக்கார்.. யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் அப்பன்-ன்னு ஸ்டாலின் சொல்றது அசிங்கமாக இருக்கு.

முக அழகிரி
இப்போ ஸ்டாலினுக்கு புது பிரச்சனை ஒன்னு இருக்கு.. அவரை பழிவாங்க அவரது அண்ணன் அழகிரி கிளம்பிவிட்டார்... ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று, அழகிரி போலீஸ்கிட்ட புகார் மட்டும் தரட்டும், நாங்க உடனே நடவடிக்கை எடுப்போம்.. நாங்கள் நயமாக பேசி, அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் ஸ்டாலினுக்கும், இன்னொரு பக்க வாசல் அழகிரிக்கும் பிரித்து கொடுத்து விடுவோம்... உங்களுடைய ஒரு லட்சம் கோடி சொத்தை குடும்பத்தில் எல்லாருக்குமே பிரித்து கொடுத்து விடுவோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய பிரச்சினை வருகிறது... அவர் மீது நயன்தாரா புகார் கொடுக்க போகிறார். உதயநிதி ஸ்டாலின், இப்போ போக்சோ சட்டத்தில் உள்ளே போகப் போகிறார்.. ஆனால் இவங்க என்னை பிடிச்சு உள்ளே போட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறாங்க.. நான் நினைத்தால், இன்னிக்கே இவங்களை பிடிச்சு உள்ளே போட்டுடுவேன்.. ஏன்னா, எங்களிடம்தான் அதிகாரம் இருக்கு.. மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது.. என் பேச்சுக்கு பதில் சொல்ல முடியும்னா, எதிரெதிரே நின்று வெட்ட வெளியில் பேசுவோம் வா.

பிழைக்கிற கட்சி
நான் 10 வருஷமாக மந்திரியாக இருக்கேன்.. நான் அன்னையில இருந்து கோஷம் போட்டவன் கொடி பிடித்தவன், போஸ்டர் ஒட்டியவன்... நான் ஒன்னும் மிட்டா மிராசுதாரர் கிடையாது.. வாக்கு சாவடியில் வாழ்க்கையை தொலைத்தவன்.. இன்னைக்கு உழைப்பால் மாவட்ட செயலாளராக ஆகியிருக்கேன்.. அதிமுக உழைக்கிற கட்சி, திமுக பிழைக்கிற கட்சி" என்றார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications