தங்கம் தென்னரசுவை எதிர்க்க எதிர்க்கட்சியினர் தயக்கம்! ஸ்டாலின் புகழாரம்
விருதுநகர்: தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தங்கம் தென்னரசுவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அஞ்சும் அளவுக்கு வலிமையான வேட்பாளர் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபைத் தொகுதிகளுக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி திருச்சுழி தொகுதி வேட்பாளர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் தொகுதி வேட்பாளர் கடற்கரைராஜ், ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியன், சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருச்சுழி தொகுதி வேட்பாளரும், எனது சகோதரரும், தலைவர் கருணாநிதியின் அன்புத் தூணுமான தங்கம் தென்னரசு ஐந்து முறை சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர். அவரை எதிர்கொள்ளக் கூட எதிர்க்கட்சியினர் தயங்குகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அந்த அளவுக்கு வலிமையான வேட்பாளர் தங்கம் தென்னரசு. எனவே, உதயசூரியன் சின்னத்தில் அவருக்கு நீங்கள் அனைவரும் மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
நம்மில் பலருக்கு சிவகாசி என்றால் பட்டாசு, சாத்தூர் என்றால் பலகாரம், விருதுநகர் என்றால் பரோட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, தீப்பெட்டி, காலண்டர் என அத்தனையும் தனித்துவமானது. உங்கள் உழைப்பினால்தான் இந்த மாவட்டத்தை 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கிறார்கள். மொத்தத்தில் சுறுசுறுப்புக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்ற மக்கள் வாழும் மாவட்டம் தான் விருதுநகர்.
அப்படிப்பட்ட விருதுநகர் மக்களை நாடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓய்வு இல்லாமல் உழைக்கும் உங்களைப் பார்த்து, நானும் என்னை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறேன்.
விருதுநகர் என்றால் வீர தியாகி சங்கரலிங்கனார் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது. அதுபோல ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பது போல, விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர்.
அரசியல் கடந்து தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஐயா காமராஜரை நான் எப்போதும் மறக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் என்று தலைவர் கலைஞர் அறிவித்ததை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத் தமிழர் காமராஜரின் மண்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது, மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது அறிய முடிகிறது. நீங்களும் அதே எண்ணத்தில் இருந்தால், இங்கே நிற்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications