விருதுநகரில் அமையும் மினி டைடல் பூங்கா.. டெண்டர் கோரிய தமிழக அரசு.. இளைஞர்களுக்கு குட் நியூஸ்!
விருதுநகர்: தமிழ்நாடு பட்ஜெட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன்படி தற்போது விருதுநகரில் டைடல் பூங்கா அமைப்பதற்காக டெண்டரை தமிழக அரசு கோரி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரைப்படம், வடிவமைப்பு ஆகியவற்றை தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும், விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். விருதுநகர் மாவட்டத்தை சுற்றி ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அங்கு படிக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை பட்டாசு தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலை, டெக்ஸ்டைல் ஆகியவையே வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இதனால் விருதுநகர் மாவட்டத்திற்கு என்று மினி டைடல் பூங்கா கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.
மினி டைடல் பூங்கா அறிவிப்புக்கு பின், பணிகள் எப்போது தொடங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. வரைபடம், வடிவமைப்பு தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரி இருக்கிறது. அதேபோல் திட்ட மேலாண்மை ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்த பின் விருதுநகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, வரைபடம் மற்றும் வடிவமைப்பு ஒப்புதல் பெறப்படும். அதேபோல் சுற்றுச்சூழல் அனுமதி, கட்டட வடிவமைப்பு அனுமதி ஆகியவை பெற வேண்டும். இதன்பின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வேலூர், நாமக்கல் ராசிபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்கா அந்தந்த மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. இதனால் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைந்து அது அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications