கண்ணை மறைத்த காதல்.. 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. காதலனுமா! அதிர்ந்த விருதுநகர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் மறுத்ததால் 10 ஆம் வகுப்பு மாணவி யாரும் எடுக்க கூடாத விபரீத முடிவை எடுத்துள்ளார். 15 வயதே ஆன அந்த மாணவி தன் காதலனுடன் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர். இவரது மனைவி நாச்சியார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. ஒரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றொரு மகள் காவியா. 15 வயது ஆன காவியா அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஈஸ்வர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
இந்த நிலையில் காவியா அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாணியன் மகன் ஆகாஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக ஆகாஷும் - காவியாவும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆகாஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினர்
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த காவியா ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் காவியா வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளனர். எப்படியும் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஆகாஷும், காவியாவும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை தீர்வு அல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications