விருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர்: எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியிலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. விபத்துகளை தவிர்க்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராஜலட்சுமி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன தீயை அணைக்கும் பணியில் ஏராளமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இரவு பகலாக ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications