வெற்றியை உறுதியாக்கும் விருதுநகர் மாரியம்மன்.. வழிபாடு நடத்தி வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா!
விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு பொதுமக்களை சந்தித்திருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் நடிகர் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்திருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இதனையடுத்து விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகாவை பாஜக களமிறக்கியுள்ளது.
பாஜக வேட்பாளர் விவரங்களை பொறுத்த அளவில்,
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன்,
நீலகிரி (தனி) எல்.முருகன்,
கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன்
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன்
சிவகங்கையில் தேவநாதன்
மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன்
விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார்
தென்காசி (தனி) பி.ஜான் பாண்டியன்
மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம்
வேலூரில் ஏ.சி.சண்முகம்
கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன்
பெரம்பலூரில் டி.ஆர்.பாரிவேந்தர்
திருவள்ளூரில் பொன்.வி.பாலகணபதி
வட சென்னையில் ஆர்.சி.பால்கனகராஜ்
திருவண்ணாமலையில் ஏ.அஸ்வத்தாமன்
நாமக்கலில் கே.பி.ராமலிங்கம்
திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன்
கரூரில் வி.வி.செந்தில்நாதன்
சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி
நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சாவூரில் எம்.முருகானந்தம்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் விருதுநகர் தோகுதியில் போட்டியிடும் ராதிக சரத்குமார், நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தார். இதனையடுத்து இன்று, விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மக்களை சந்தித்து பின்னர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், விருதுநகர் என்பது விருதுகால்பட்டியாக இருந்த காலத்திலிருந்தே இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் பெரிய கட்டிடம் ஏதும் இன்றி வெறுமென மண் சுவர் மட்டுமே இருந்ததாகவும், அதன் பின்னர் கோயில் பெரியதாக எழுப்பப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள எல்லா நாட்டார் தெய்வங்களை போலவும், விருதுநகர் பராசக்தி மாரியம்மன் சுவாமிக்கும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்த சாமியை வணங்கிவிட்டு செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லப்படுகிறது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலின் பங்குனி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக கடந்த 17ம் தேதி சாட்டுதல் வைபவம் நடைபெற்றது. சாட்டு வைத்ததையடுத்து பக்தர்கள் பொங்கல் திருவிழாவுக்காக விரதமிருந்து வருகின்றனர். வரும் 31ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அதை தொடர்ந்து ஒரு வாரமும் தினசரி ஒவ்வொரு மகமை மண்டபத்தில் வழிபாடுகள், பூஜைகள் நடக்கும். பின்னர் ஏப்ரல் 7ம் தேதி பங்குனி பொங்கல் திருவிழாவும், ஏப்ரல் 8ம் தேதி கயிறு குத்து, அக்னிசட்டி ஆகிய விஷேஷங்கள் நடைபெறுகின்றன.
பின்னர் ஏப்ரல் 9ம் தேதி தேரோட்டமும் நடத்தப்பட்டு, ஏப்ரல் 11ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடி கொடி இறக்கம் செய்யப்படும். ஏப்ரல் 14ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications