விருதுநகர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: நீண்ட இழுபறிக்கு பின் விஜய பிரபாகரன் தோல்வி
விருதுநகர்: நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் இன்று எண்ண பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் காலையில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரனும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூரும் மாறி மாறி முன்னிலைப் வகித்து வந்த நிலையில் இறுதியாக மாணிக்க தாகூர் வெற்றி பெற்றிருக்கிறார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இளுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். காலையில் எண்ணிக்கை தொடங்கிய போது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு நிலவரம் மாறி இருந்தது. இந்த நிலையில் இறுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தோல்வி அடைந்திருக்கிறார். 40 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகர் தொகுதியில் தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் மாணிக்கம் தாகூரும் இரண்டாவது இடத்தில் விஜய பிரபாகரனும் இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமார் 164149 வாக்குகளையும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கௌசிக் 76122 வாக்குகள் பெற்று இருக்கிறார்கள்

இந்த தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்று மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதோடு நான்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் கடந்த 2009இல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று இருந்த நிலையில், 2014இல் அவர் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். மீண்டும் 2019 வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டும் மாணிக்கம் தாகூர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் தொகுதி மக்களை அதிகமாக சந்திக்கவில்லை என்ற அதிருப்தி இருக்கிறது.
ஆனாலும் விருதுநகரில் தங்கம் தென்னரசு (நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர்) மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை) இரண்டு மூத்த திமுக அமைச்சர்கள் இருப்பதால் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதுபோல விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு அவருடைய சொந்த தொகுதியில் அவருடைய மகன் முதல் முறையாக போட்டியிடுகிறார். ஜாதி ரீதியான ஓட்டுகள்,கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு ,இதைத் தாண்டி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அனுதாப ஒட்டு என்று சளைக்காமல் எல்லா விதத்திலும் மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுத்து வந்தார்.
அதுபோல பிஜேபி கட்சியில் இணைந்த ஒரே வாரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராதிகா சரத்குமார். கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் தான் சார்ந்த சமூகம் மற்றும் தன் கணவர் சார்ந்த நாடார் சமூகம் ஓட்டுகளையுமே பெரிதளவில் நம்பி தேர்தல் பணியாற்றினார். ஒரு சில சமுதாய அமைப்புகள் மற்றும் கணவர் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டாரங்கள் இவருக்கு ஆதரவாக தேர்தலில் பணி செய்தது. ஆனாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிவடையாததால் விருதுநகர் மக்களுக்கு பிஜேபி மீது அதிருப்தியும் இருக்கிறது. இதனால் இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். விருதுநகர் தொகுதியில் 2000 ஆண்டுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளின் விபரம் வருமாறு,
2009 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி மாணிக்கம் தாகூர் (இ.கம்யூ)- 3,07,187
வைகோ (மதிமுக)- 2,91,423
கே பாண்டியராஜன் தேமுதிக- 1,25,229
எம் கார்த்திக் பாஜக- 17,336
2014ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டி ராதாகிருஷ்ணன் (அதிமுக)- 4,06,694
வைகோ (மதிமுக)-2,61,143
எஸ் ரத்தினவேலு (திமுக )- 2,41,505
பி மாணிக்கம் தாகூர் (இ.கம்யூ)- 38,482
2019 ஆம் ஆண்டில் தேர்தல் முடிவுகள்
பி மாணிக்கம் தாகூர் (இ.கம்யூ)- 4,70,883
ஆர் அழகர்சாமி (தேமுதிக)- 3,16,329
எஸ் பரமசிவ ஐயப்பன்(AMMK) -107,615


Click it and Unblock the Notifications
