அமெரிக்காவில் 8,24,520 பேர் கொரோனாவால் மரணம் - ஜோ பிடன் உருக்கம்
அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 824,520 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அதிக அளவிலான சிறுவர்கள் தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் விட்டுச் சென்ற குடும்பத்தினரையும், என்றென்றும் நினைத்துப் பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 8,24,520 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மொத்தம் 5,14,35,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால் கொரோனா உயிரிழப்புகளில் 15 சதவிகிதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிபர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுக்கு பலியானவர்கள் ஒவ்வொருவரையும் தான் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் விட்டுச் சென்ற குடும்பத்தினரையும், என்றென்றும் நினைத்துப் பார்ப்பதாகவும் பிடன் கூறியுள்ளார்.
கேப்பிடால் ஹில்லில் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில், ஒன்று கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் தற்போது வரை 60 சதவிகிதம் மக்களுக்கு, இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே அதிகம் உயிரிழப்பதாக, அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஓமிக்ரான் திரிபு வேகமாக பரவி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும் என, அதிபர் பிடன் வலியுறுத்தியுள்ளார்.
அதிக அளவிலான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 144,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,02,04,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவைப் போலவே இங்கிலாந்திலும், கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 88,376 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கான பாதிப்பாகும். இதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் "கோவிட் பாஸ்" பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொது கூட்டம், இரவு விடுதி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் 60,866 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 84,60,712 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மொத்தம் 121,171பேர் மரணமடைந்துள்ளனர். ஜெர்மனியில் ஒரே நாளில் 53,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 479 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 28,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,133 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications