'காபி குடிக்கிறியா'.. சிங்கத்துடன் கொஞ்சும் நபர்.. பார்த்து சூதானமா இருக்க நெட்டிசன்கள் அட்வைஸ்!
வாஷிங்டன்: வாலிபர் ஒருவர் செல்லப்பிராணிகளான பூனை, நாய்க்குட்டியை கொஞ்சுவது போல சிங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி விளையாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் 'பார்த்து சூதானமா இருக்க' அந்த நபருக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
பூனை மற்றும் நாய்கள் தான் உலகம் முழுக்க பெரும்பாலும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனைகளுடன் கொஞ்சி விளையாடுவது மற்றும் தங்கள் கட்டளைகளுக்கு கீழ் படியவைப்பது என அதனுடன் விளையாடி அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை நாம் பார்த்து இருக்கிறோம்.

செல்லப்பிராணியாக சிங்கம்
இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் சிங்கத்தை வீட்டில் செல்லப்பிராணி போல வளர்த்து அதை தனது கட்டளைக்கு படிய வைத்து ஹுமைத் அப்துல்லா என்பவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்ன சிங்கத்தையா? என்று வியந்து பார்ப்பது புரிகிறது. இந்தியா போன்ற பெரும்பாலான நாடுகளில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்ட விரோதம் ஆகும்.

நாய்க்குட்டியை கொஞ்சுவது போல..
எனினும் சில நாடுகளில் உரிய அனுமதியின் பேரில் சிங்கத்தை வீட்டில் வளர்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஹூமைத் அப்துல்லா என்பவர் வெள்ளை நிற சிங்கம் ஒன்றை நாய்குட்டியை போல தனது வீட்டில் வளர்த்து அதனுடன் கொஞ்சி விளையாடி அது தொடர்பான வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார். ஹூமைத் அப்துல்லாவின் இந்த பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவுகின்றன.

மடியில் படுத்துக்கொண்டு..
'சிங்கத்துடன் சிங்கம்' என்ற கேப்ஷனுடன் ஹூமைத் அப்துல்லா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பூனைக்குட்டியை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவது போல சிங்கத்தை கட்டியணைத்து கொண்டு இருக்கிறார். அப்போது அவருடைய பிடியில் இருந்து நழுவும் சிங்கம் கர்ஜிக்கிறது. சிங்கத்தை மீண்டும் கர்ஜிக்குமாறு அவர் கூறவும் அப்படியே கட்டுப்படும் சிங்கம் மீண்டும் கர்ஜிக்கிறது.

சிங்கத்திற்கு காஃபி
இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து பரவிக்கொண்டு இருக்கிறது. சிம்பா என்று தனது சிங்கத்திற்கு பெயர் வைத்து இருப்பதாக தெரிவித்துள்ள ஹூமைத், சிங்கத்திற்கு காஃபியும் கொடுக்கிறார். ஆனால், அது குடிக்க மறுக்கிறது. சிம்பாவுக்கு காஃபி பிடிக்கவில்லை போலும்.. மீண்டும் கர்ஜிக்கிறது. என்றும் மீண்டும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

உங்களையே சாப்பிட்டு விடும்
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கீழே தங்கள் பதிவுகளை வியந்தபடி பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், காட்டுக்கே ராஜாவாக இருந்த சிங்கத்தை நான்கு சுவற்றுக்குள் அடைத்து இருக்கிறார்களே என ஆதங்கப்படும் வகையில் பதிவிட்டு உள்ளார். மற்றொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், எப்படி பார்த்தாலும் அது வனவிலங்குதான்.. ஒரு நாள் உங்களை இந்த சிங்கம் சாப்பிட்டு விடப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள் சகோதரரே.. என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications