"தீராத விளையாட்டு பிள்ளை.." ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கிய இளைஞர்! ஐந்து பேருக்கும் ஓகேவாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் ஐந்து பெண்களைக் கர்ப்பமாக்கிய நிலையில், அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் பேபி ஷவர் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இப்போது வெளிநாடுகளில் ஒரு சிலர் பலதரப்பட்ட மணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அதாவது ஆண் அல்லது பெண் ஒரே நேரத்தில் பல பாட்னர்களுடன் இருப்பது தான் இந்த பலதரப்பட்ட மணம் ஆகும்.

ஒருவருடன் செட் ஆகவில்லை என்றால் மற்றொருவருடன் வாழ்வது வெளிநாடுகளில் இயல்பானது. ஆனால், ஒரே நேரத்தில் பலருடன் இருப்பது என்பது மேற்குலக நாடுகளிலுமே கூட அரிதாக நடக்கும் சம்பவம் தான்.
வினோதம்: அப்படியொரு வினோத சம்பவம் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துள்ளது. அங்கே வசித்து வரும் 22 வயது இசைக்கலைஞர் ஜெடி வில் என்பவர் தன்னால் கர்ப்பமான 5 பெண்களுக்கு ஒரே நேரத்தில் கூட்டாக பேபி ஷவர் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அவரது பாட்னர் லிஸி ஆஷ்லீக் என்பவர் இதை உறுதி செய்துள்ளார். பேபி ஷவர் என்பது வெளிநாடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி குயின்ஸ் என்ற பகுதியில் பேபி ஷவர் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான அழைப்பிதழ்களை 29 வயதான இந்த லிஸி ஆஷ்லீக் பகிர்ந்துள்ளார். அந்த அழைப்பிதழில் அவர்கள் இருவரது படங்களும் இருக்கிறது. மேலும், அதில் "வெல்கம் லிட்டில் ஜெடி வில்ஸ் 1-5" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
பேபி ஷவர்: மேலும், பேபி ஷவர் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தையும் அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் அப்பாவாக போகும் ஜெடி வில் தனது மனைவிகளுடன் கூலாக பல்வேறு போஸ்களை கொடுக்கிறார். அந்த குடும்பத்தின் கலக்கல் போட்டோக்கள் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் ஆஷ்லே, போனி பி, கே மெரி, ஜிலீன் விலா மற்றும் இயன்லா கலிஃபா கலெட்டி ஆகிய ஐந்து பெண்களும் ஒருவரை மற்றொருவர் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம். ஐந்து பேரும் இணைந்து ஒன்றாக இருந்தால் மட்டுமே அது பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு நல்லது என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். குழந்தைகள் பெரிய குடும்பத்தில் வளர்வது அவர்களுக்குமே நல்லதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகான குடும்பம்: எங்கள் அழகான குடும்பத்தைப் பாருங்கள் என்று அவர்கள் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். மேலும், அந்த பெண்கள், "நாங்கள் எங்கள் குழந்தையின் அப்பாவை நேசிக்கிறோம்! எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நாங்கள் அழிக்க மாட்டோம்! எங்கள் குடும்பங்கள் இதை ஏற்றுக்கொண்டன!" என்று கூறுகிறார்கள்.
இது தொடர்பாக வில் தரப்பு கூறுகையில், "சமூகம் மாறிவிட்டது... இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி இருக்கிறது என்பதும் மாறிவிட்டது. பலதரப்பட்ட மணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் வரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே இந்த 5 பெண்களும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். அந்த பேபி ஷவர் வீடியோவில் 5 அம்மாக்கள் ஒன்றாக இணைந்து நடனமாடுவதும், ஒன்றாகச் சாப்பிடுவதும் சந்தோஷமாக இருப்பது போல இருக்கிறது.
நெட்டிசன்கள்: ஆனால், இதை நெட்டிசன்கள் ஏற்றுக் கொண்டது போலத் தெரியவில்லை. நெட்டிசன்கள் பலரும் இவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஐந்து பேரை ஏமாற்றுவதைக் கொண்டாடுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஐந்து பெண்களுடன் நிச்சயம் ஒருவரால் ஒரே நேரத்தில் வாழவே முடியாது என்று மேலும் சிலர் கூறி வருகின்றனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications