இந்தியாவில் மத சுதந்திரம் கவலைக்கிடம்.. அமெரிக்க ரிப்போர்டில் புல்டோசர் மாடல், ஆர்எஸ்எஸ் தலைவர்
வாஷிங்டன்: இந்தியா, ரஷியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை குறிவைப்பதாக அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்காவின் அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தற்போது வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தூதர் ரஷாத் ஹுசைன் இதுபற்றி பேசுகையில், "பல ஆண்டுகளாக ஏராளமான அரசாங்கங்கள் தொடர்ந்து மதங்களை பின்பற்றும் மக்களை தங்கள் எல்லைகளுக்குள் எளிதாக தாக்கி வருகின்றன." என்றார்.
இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகள் மற்றும் அதன் மாகாணங்களில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆண்டனி பிளிங்கன் தெரிவிக்கையில், "மதம் மற்றும் நம்பிக்கைகள் ஒடுக்கப்படும் பகுதிகளை கோடிட்டு காட்ட விரும்பவில்லை. எல்லா இடத்திலும் எல்லா விதமான சுதந்திரங்களும் இருக்கும் இடத்தை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதையே இது நோக்கமாக கொண்டுள்ளது." என்றார்.
இந்த அறிக்கையில், இந்தியாவை ஆண்டனி பிளிங்கன் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கையில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பாக இடம்பெற்ற கருத்துக்கள் கடந்த ஆண்டுகளை போன்றே உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஹுசைன் தெரிவிக்கையில், "இந்தியாவில் தொடர்ந்து மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்தியாவின் ஹரிதுவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை வழக்கறிஞர்கள், மத தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டித்து உள்ளார்கள். இந்தியா தனது வரலாற்று பாரம்பரியமான பன்முகத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வலுவாக பற்றி இருக்க வேண்டும். மியான்மரில் நடைபெற்றும் வரும் ராணுவ அரசு ரோஹிங்கியா மக்களை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
மத சுதந்திரங்கள் ஒடுக்கப்படும் நாடுகளில் ரஷியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் உள்ளன. மத சுதந்திரம் மீதான தாக்குதலும், மத ரீதியிலான பாகுபாட்டையும் வெறுப்பையும் அரசு தரப்பே செய்வதை இந்த ஆண்டு அறிக்கையில் காண முடிகிறது." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஏராளமான மத வன்முறைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. குஜராத்தில் சீருடை அணியாத போலீஸ் அதிகாரிகள் பொதுவெளியில் 4 இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கியது, மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்பட்டது போன்றவை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அதேபோல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முஸ்லிம் சமுதாயத்தின் 5 தலைவர்களை சந்தித்து பேசியதும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. மோகன் பகவத்தின் இந்த நடவடிக்கையை சில முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றதாகவும், பிறர் இதனை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு என்று விமர்சித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications