"2 ரஷ்ய பெண்களுடன் தொடர்பு.. நான் செய்தது தப்பு தான்!" எப்ஸ்டீன் விவகாரம்! மவுனம் கலைத்த பில் கேட்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்கத் தொழில் அதிபர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகாலத் தொடர்புக்காக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.. தனக்கு இரு ரஷ்யப் பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தபோதும், சட்டவிரோதமான எதையும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை அதிர வைத்த மாபெரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன். சிறுமிகள் உட்பட இளம் பெண்களைக் கடத்தி அவர்கள் பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்குப் பாலியல் தொழிலாளியாக அனுப்புவது தான் இவரது வேலை.! இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சீக்ரெட் பைல்ஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பில் கேட்ஸ்
அதில் பில் கேட்ஸ் பெயரும் கூட அடிப்பட்டது. இதனால் அவருக்குப் பொதுவெளியில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாகவே இந்தியா வந்தபோதும் கூட அவர் இந்தியன் ஏஐ சம்மிட் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை. இத்தனை காலமாக எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்த பில் கேட்ஸ் இப்போது முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
அவர் தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் தனிப்பட்ட நிகழ்வில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதை அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இதழில் வெளியிட்டுள்ளது.. அதில் தான் தவறாக முடிவெடுத்துவிட்டதாகவும் இதனால் தனது கேட்ஸ் அறக்கட்டளையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இரண்டு ரஷ்யப் பெண்களுடனான உறவை ஒப்புக்கொண்ட போதிலும், அவர்கள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டோர்களோ அல்லது சட்டவிரோத நடத்தையுடன் தொடர்புடையதல்ல என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மிக பெரிய தவறு
எப்ஸ்டீனுடன் நேரம் செலவழித்ததும், அறக்கட்டளை ஊழியர்களை அவருக்கு அறிமுகப்படுத்தியதும் தான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை கேட்ஸ் ஒப்புக்கொண்டார். அவர் மேலும், "நான் செய்த தவறால் இதில் சிக்கிய மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடனோ, அவரைச் சுற்றியிருந்த பெண்களுடனோ எந்த நேரத்தையும் செலவிடவில்லை" என கேட்ஸ் தெளிவுபடுத்தினார்.
எப்ஸ்டீன் பைல்ஸ்களில் சில பெண்களுடன் பில் கேட்ஸ் இருந்தார். அந்ச போட்டோக்கள் எப்ஸ்டீனின் வேண்டுகோளின்படி எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார். 2011ம் ஆண்டு தான் முதன்முதலில் எப்ஸ்டீனை சந்தித்ததாக கேட்ஸ் குறிப்பிட்டார். அதற்கு முன்பு 2008ல் எப்ஸ்டீன் ஒரு பாலியல் புகாரில் சிக்கியிருந்தார். அந்த விவகாரம் பற்றி தனக்குத் தெரிந்தும், அவரது பின்னணியைத் தான் சரியாக ஆராயத் தவறியதை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டார்.
சந்தேகம்
அவர் மேலும், "அப்போது எனது மனைவியாக இருந்த மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் இது குறித்து கவலை தெரிவித்தார். எப்ஸ்டீன் குறித்து 2013ம் ஆண்டிலேயே கவலை தெரிவித்தார். ஏதோ தவறாக இருப்பதாகத் தொடர்ந்து எச்சரித்தார். ஆனால், அதையும் தாண்டி நான் 2014ஆம் ஆண்டு வரை எப்ஸ்டீனைச் சந்தித்து வந்தேன்" என்றார்.
எப்ஸ்டீனுடன் தனி விமானத்தில் பயணம் செய்து, ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் சந்தித்ததாக கேட்ஸ் ஊழியர்களிடம் கூறினார். இருப்பினும், அவர் எப்ஸ்டீனுடன் எங்கும் இரவை கழித்தது இல்லை.. மேலும், அவரது பிரைவேட் தீவுக்கும் சென்றதில்லை பில் கேட்ஸ் கூறினார். தனக்குப் பல கோடீஸ்வரர்களுடன் நெருங்கிய உறவுகள் இருப்பதாகவும், இதன் மூலம் சர்வதேச சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி திரட்ட முடியும் என்றும் எப்ஸ்டீன் கூறியதாக கேட்ஸ் தெரிவித்தார்.
நம்பிக்கை
பில் கேட்ஸ் மேலும், "மற்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் மட்டுமே எப்ஸ்டீன் உடன் நான் கலந்து கொண்டேன். இதனால் அப்போது எல்லாம் சாதாரணமாகவே தோன்றியது. ஆனால், அங்கு எல்லாம் நான் இருந்தது தான் எப்ஸ்டீன் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்து என்பதை பிற்காலத்திலேயே உணர்ந்து கொண்டேன்" என்றார்.
பாலியல் தொடர்பு
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய கேட்ஸ், "பிரிட்ஜ் விளையாட்டின்போது சந்தித்த ஒரு ரஷ்ய வீராங்கனையுடனும், பிஸ்னஸ் மீட்டிங்களில் சந்தித்த ஒரு ரஷ்ய ஆய்வாளருடனும் உறவுகள் இருந்தது உண்மை தான். ஆனால், அவர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இல்லை. எப்ஸ்டீனை நான் கடைசியாக 2014ல் தான் சந்தித்தேன்" என்றார்.
எப்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே எப்ஸ்டீன் 2019 ஆகஸ்டில் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும், அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications