என்ன மனுஷன்.. ஒரே நொடியில் 99% சொத்தை தானமாக தந்த பில் கேட்ஸ்.. அப்போ குழந்தைகளுக்கு எவ்வளவு போகும்?
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். கம்ப்யூட்டர் துறையில் மொத்தமாகப் புரட்டிப்போட்ட பில் கேட்ஸ், பிஸ்னஸை தாண்டியும் தனது தொண்டு நிறுவனம் மூலம் உலகெங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். இதற்கிடையே பில் கேட்ஸ் தனது சொத்தில் 99%ஐ தானமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இப்போதும் உலகின் கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் பில் கேட்ஸ். அவரது விட்ணோஸ் ஓஎஸ் நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் முறையே மாற்றியது. இதன் மூலம் பில் கேட்ஸும் மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். பிஸ்னஸ் மட்டுமின்றி அவர் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளையும் செய்து வருகிறார்.

99% நன்கொடை
மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் அவர் இதுபோன்ற நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார். இதற்கிடையே பில் கேட்ஸ் தனது சொத்துகளைத் தானமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். தானம் என்றால் ஏதோ 5%, 10% இல்லை.. தனது சொத்தில் 99%ஐ தானமாக வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
பில் கேட்ஸ் தனது செல்வத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே தனது குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட் இதுபோல தனது சொத்தில் பெரும் பகுதியைத் தானமாக வழங்கப்போவதாக அறிவித்த நிலையில், இப்போது பில் கேட்ஸும் அதேபோல அறிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எவ்வளவு கிடைக்கும்
தனது குழந்தைகள் தன் மூலம் செல்வத்தைப் பெறுவதை விடச் சொந்தமாக வெற்றியை அடைய வேண்டும் என்று நம்புவதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்தார். அதேநேரம் பில் கேட்ஸின் குழந்தைகளுக்குச் செல்வமே கிடைக்காது என சொல்ல முடியாது. இப்போது ப்ளூம்பெர்க் மதிப்பீட்டின்படி பில் கேட்ஸின் நிகர மதிப்பு $162 பில்லியனாக உள்ளது. அதில் ஒரு சதவீதம் அதாவது $1.62 பில்லியன் வரும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.13,500 கோடியாகும். இந்தத் தொகை அவரது மூன்று குழந்தைகளுக்குப் பிரித்துத் தரப்படும்
பில் கேட்ஸ்
சமீபத்தில் ஃபிகரிங் அவுட் வித் ராஜ் ஷமானி என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பில் கேட்ஸ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். தனது குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டுத் தலைசிறந்த கல்வியையும் பெற்றதாகக் குறிப்பிட்ட பில் கேட்ஸ், இருப்பினும் அவர்கள் தனது மொத்தச் செல்வத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
என்ன காரணம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது எனக்கு இப்போது வந்த யோசனை இல்லை.. 69 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த யோசனை எனக்கு வந்துவிட்டது. நான் எதற்காகப் பெரிய சொத்தை விட்டுச் செல்ல வேண்டும். அதில் அர்த்தமே இல்லை. இதுபோல நான் பெரிய செல்வத்தை விட்டுச் செல்வது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவியும் செய்யாது. நாங்கள் என்ன சாம்ராஜ்யத்தையா உருவாக்கப் போகிறோம். அதற்குப் பதிலாக எனது பிள்ளைகள் தங்கள் சொந்தப் பாதைகளை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் தாங்களாக வெற்றியை அடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் கடந்த 1994ம் ஆண்டு திருணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெனிஃபர் கேத்தரின் கேட்ஸ் (28), ரோரி ஜான் கேட்ஸ் (25), மற்றும் ஃபோப் அடீல் கேட்ஸ் (22) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், கடந்த 2021இல் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் விவாகரத்து பெறுவதாகச் சொல்லி உலகிற்கே ஷாக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications