கமலா ஹாரிசா, டொனால்டு டிரம்பா? அதிபர் தேர்தலில் யாரை தேர்வு செய்யனும்? போப் என்ன சொன்னார் பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். பல கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அமெரிக்க தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், யாரை அதிபராக தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதை இங்கு பார்ப்போம்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக டொனால்டு டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸுக்கே அதிக ஆதரவு கிடைத்தது. உலகின் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குவதால், அந்த நாட்டின் அதிபராக அடுத்து வரப்போது யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுக்கவே விளங்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜனநாயக கட்சி சார்பில் முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், டிரம்புடனான விவாதத்தில் தடுமாறியது போன்றவற்றால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். அதுவரை டிரம்புக்கு ஓரளவு சாதகமாக இருந்த தேர்தல் களம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக சொல்லுகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த விவாதத்திற்கு பிறகு ரேஸ் டூ ஒயிட் ஹவுஸ் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 49.4% பேர் வாக்களித்துள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு ஆதரவாக 46.9% மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 2.5% அதிகமாக இருக்கிறது. இப்படி அமெரிக்க தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிபர் தேர்தல் தொடர்பாக போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் இது தொடர்பாக கூறியதாவது:- இருவருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள். ஒருவர் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளார். மற்றொருவர் குழந்தைகளை கொல்கிறார். இருவருமே வாழ்க்கைக்கு எதிரானவர்கள்தான். நான் அமெரிக்கர் கிடையாது. நான் வாக்களிக்க போவது இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாக்கி கொள்ள வேண்டும்.
இருவருமே புலம் பெயர்ந்து வருபவர்களை விரட்டுகிறார்கள். புலம் பெயர் மக்களை பணி செய்ய அனுமதிப்பது இல்லை. இரண்டு தீமைகளில் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும். யார் குறைந்த தீமை? அந்த பெண்ணா அல்லது ஜெண்டில் மேனா? என்பது எனக்கு தெரியவில்லை. ஒவ்வொருவரும் நன்கு யோசித்து தங்கள் மனசாட்சி படி முடிவு செய்ய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications