பிரேசிலில் பேயாட்டம் ஆடும் கொரோனா.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. இந்தியாவில் மீண்டும் கிடுகிடு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைவிட மிக மோசமான பாதிப்பை பிரேசில் நாடு கொரோனா பாதிப்பால் சந்தித்து வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2659 பேர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1672 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் உயிரிழப்பு மோசமாக இல்லை என்றாலும் பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 39,643 ஆக அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி 122,351,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,702,255 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து 98,642,042 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 21,007,476 சிகிச்சை பெறுகிறார்கள்.

பாதிப்பு அதிகம்

பாதிப்பு அதிகம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 30,357,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வதாக பிரேசிலில் கொரோனா தொற்றால் 11,787,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 11,513,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவதாக ரஷ்யாவில் 4,428,239 பேரும், இங்கிலாந்தில் 4,280,882 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 4,181,607 பேரும், இத்தாலியில் 3,306,711 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில் முதலிடம்

பிரேசில் முதலிடம்

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 87,169 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 61,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 39,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் நேற்று ஒரே நாளில் 34,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலில் அதிகம்

பிரேசிலில் அதிகம்

கடந்த 24 மணி நேரத்தில் உலகில் அதிகபட்சமாக பிரேசிலில் 2659 பேர் கொரோனா பாதிப்பால் மரணத்தை தழுவியுள்ளனர். அடுத்ததாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1672 பேர் மரணம் அடைந்தனர். மெக்ஸிகோவில் 789 பேரும், ரஷ்யாவில் 460 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 423 பேரும், போலந்து நாட்டில் 356 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 155 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் அதிகம்

அமெரிக்காவில் அதிகம்

ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு என்று பார்த்தால் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,702,255 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 552,303 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 287,795 உயிரிழந்துள்ளனர்.மெக்ஸிகோவில் 195,908 பேரும், இந்தியாவில் 159,405 பேரும் இதுவரை பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு குறையவில்லை என்பதே கவலை தரும் செய்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+