சீனாவின் அத்துமீறல்.. இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த சூப்பர் பதிலடி
வாஷிங்டன்: சீன-இந்திய எல்லை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கருத்து தெரிவித்த அமெரிக்க அரசு, சீனா அரசு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செய்து வரும் ஆக்ரோஷமான செயல்பாடுகள் கவலைஅளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Recommended Video
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரி மற்றும் சூமர் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது சீனா.
இந்த பகுதிகளில் சீனா இதுதான்எல்லை என்று ஏற்க மறுத்து தொடர்ந்து அத்துமீறுகிறது. அத்துடன் தங்கள் எல்லையில்தான் இருக்கிறோம் என்றும் எந்த நாட்டின் எல்லையையும் நாங்கள் ஆக்கிரமித்தது கிடையாது என்றும் வாய்சவடால் விட்டு வருகிறது.

பாங்காங் ஏரியில் அத்துமீறல்
ஆனால் எல்லையில் நிலைமை வேறாக உள்ளது. அண்மையில் ஜூன் 15ம் தேதி அதிகாலை அத்துமீறி கூடாரம் அமைத்து மோதலில் ஈடுபட்ட சீன வீரர்கள் அங்கிருந்து வெளியே மறுத்த போது இந்திய ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. ஆனால் அதை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுத்துவிட்டது. அதன்பிறகு எல்லையில் படைகளை குறைத்த சீனா, சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

முறியடித்த இந்திய ராணுவம்
இந்நிலையில் பாங்காங் ஏரி சோ ஏரியின் வடகரை பகுதியில் கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் சீன ராணுவத்தினர் எல்லைகளை மாற்றியமைக்கும் அத்துமீறி ஈடுபட்டு உள்ளது. இந்திய ராணுவ நிலைகளிடம் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்து ராணுவ நிலைகளை வலுப்படுத்தி உள்ளது. எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

என்ன கருத்து
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில், "நாங்கள் இந்தியா சீனா எல்லை நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் வரும் என்று நம்புகிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏற்கனவே கூறியது போல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சீன கம்யூனிச அரசு அளவுக்கு மீறி அத்துமீறி ஆக்ரோஷமாக செயல்படுவது மிகவும் கவலைக்குரியது.

இதை தடுக்க என்ன வழி
தைவான் ஜலசந்தி முதல் சின்ஜியாங் வரை, தென் சீனக் கடல் முதல் இமயமலை வரை, சைபர்ஸ்பேஸ் முதல் சர்வதேச அமைப்புகள் வரை, நாங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை கையாண்டு வருகிறோம். சீன அரசு தனது சொந்த மக்களை அடக்குவதற்கும் அதன் அண்டை நாடுகளை கொடுமைப்படுத்துவதற்கும் முயல்கிறது. இந்த ஆத்திரமூட்டும் செயல்களை தடுப்பதற்கான ஒரே வழி சீனாவிற்கு ஆதரவாக நிற்க வேண்டும் போல' என்று விமர்சித்துள்ளது

உண்மை தான்
சீனாவின் அத்துமீறலை வெளியுறவத்துறை அமைச்சகத்தின் செயதி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று உறுதி செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு சீனா ராணுவம் கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் லடாக் எல்லையில் உள்ள பாங்காங் சோ ஏரியில் அத்துமீறி உள்ளது. ராணுவ நிலைகளை மாற்றியமைக்கும் ஆத்திரமூட்டும் செயல்களை செய்தது. அதை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர் என்று கூறியுள்ளார்.

அப்படித்தான் நடக்கும்
சீன வெளியுறவு மைச்ர் வாங் யீ, இந்தியா-சீனா எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படாதால் இப்பிரச்சனை நீடிக்கத்தான் செய்யும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா தயாராக உள்ளது. வேறுபாடுகள் மோதல்களாக உருவாக இடமளிக்கக்கூடாது. இருப்பினும் சீனா முதலில் பிரச்சனையை உருவாக்காது. அதேபோல் முதலில் சீனா எல்லை மீறாது" என்றார்.












Click it and Unblock the Notifications