இந்தியா-பாக் போரை நிறுத்தியது நான்தான்.. 36வது முறையாக உரிமை கொண்டாடிய டிரம்ப்! மத்திய அரசு மௌனம்
வாஷிங்டன்: கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நம்புவதை போல, நான் சொன்னதால்தான் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 36வது முறையாக தற்போது உரிமை கொண்டாடியுள்ளார். இதற்கு உரிய பதில் கொடுக்காமல் மத்திய அரசும், கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் திடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், 26 பொதுமக்களை சுட்டு கொன்றனர். இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட இந்திய ராணுவம், தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக கூறியது.

எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் பதில் தாக்குதலையும் நடந்தியது. எனவே இரு தரப்பிலும் போர் மூண்டது. எல்லையில் மாறி மாறி இரு ராணுவமும் கடுமையாக தாக்கிக்கொண்டன.
பாகிஸ்தான் விஷயத்தை பொறுத்தவரை இந்தியா மூன்றாம் தரப்பு நாடுகளின் ஆலோசனையையோ, அறிவுரையையோ, தலையீட்டையோ ஏற்காது. இது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. ஆனால், பாகிஸ்தானிடம் நான் பேசிவிட்டேன், மோதலை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்றும் போர் முடிந்துவிட்டது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்கேற்ப போரும் நின்றுவிட்டது. அப்படியெனில் போரை நிறுத்தியது யார்? மூன்றாம் நாடுகளின் தலையீட்டை இந்தியா ஏற்றதா? என எதிர்க்கட்சிகள் கேள்வியை எழுப்பின.
போதாத குறைக்கு, இந்தியா-பாக் போரை நிறுத்தியது நான்தான் என்று டிரம்ப் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்கவில்லை. அவ்வளவு ஏன்? மத்திய அரசை நாடாளுமன்றத்தில் ரவுண்டு கட்டிய எதிர்க்கட்சி எம்ப்பிக்கள் போர் நிறுத்தம் குறித்து கேள்வி எழுப்பினர். பிரதமரும் விளக்கமளித்தார். ஆனால் ஆனால் அவர் விளக்கத்தில் ஒரு இடத்தில் கூட டிரம்பின் பெயர் வரவில்லை.
இந்நிலையில் இன்று 36வது முறையாக இந்தியா-பாக் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் உரிமை கொண்டாடியுள்ளார். டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் வைத்து அர்மேனியா-அஜர்பைஜான் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய டிரம்ப்,
"இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இன்று இன்னொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். ஆனால், அணுசக்தி மோதலுக்கு முன்னதாக அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர் என்று தெரிவித்தார்.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications