கேன்சரை குணப்படுத்தும் கொரோனா வைரஸ்! இது என்ன புதுசா இருக்கே.. வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகை எந்தளவுக்கு அச்சுறுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே கொரோனா வைரஸ் கேன்சர் செல்களை தாக்கி அளிக்கும் திறனைக் கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மொத்தமாகப் புரட்டிப் போட்டது. சீனாவில் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் எந்தவொரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

அமெரிக்கா தொடங்கிய ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளையும் கொரோனா மிகக் கடுமையாகப் பாதித்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்புகளும் மிக மோசமாகவே இருந்தது.
கொரோனா வைரஸ் பரவல் இப்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்து, உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அதேநேரம் கொரோனா குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா வைரசுக்கும் கேன்சர் நோய்க்கும் ஒரு நம்பமுடியாத தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதாவது கொரோனா பாதிப்புக்குப் பிறகு கேன்சர் நோயாளிகளின் புற்றுநோய் கட்டிகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளின் திசுக்களை வைத்து இந்த ஆய்வை செய்துள்ளனர். கொரோனா வைரஸில் ஆர்என்ஏ (RNA) மூலக்கூறுகள் இருக்கும். இதுதான் கோவிட் பாதிப்பு ஏற்படக் காரணமாகும். இந்த மூலக்கூறுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு ஸ்பெஷல் செல் உருவாகக் காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ-என்சிஎம்கள் (inducible nonclassical monocytes) என்று குறிப்பிடப்படும் இந்த ஸ்பெஷல் செல்கள் புற்றுநோய் செல்களை தாக்குவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர் குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் அங்கித் இது தொடர்பாகக் கூறுகையில், "கேன்சர் நோய்க்கு சிகிச்சை அளிக்க ஒரு புதிய வழியை இது நமக்குத் தருகிறது. கடுமையான கொரோனா பாதிப்பு உருவாக்கும் ஸ்பெஷல் செல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. குறிப்பாக மெலனோமா, நுரையீரல், மார்பகம் மற்றும் பெருங்குடல் கேன்சர்களுக்கு எதிராக இவை நன்கு செயல்படுகின்றன
இந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறது. இப்போது நாங்கள் விலங்குகளின் திசுக்களில் தான் ஆய்வு செய்து இருக்கிறோம். அதேநேரம் இது எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. மற்ற சிகிச்சைகளுக்குப் பதிலளிக்காத தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இந்த முறையை நாங்கள் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம். வரும் காலத்தில் இந்த சிறப்பு செல்கள் மூலம் சிறிய மூலக்கூறுகளை உருவாக்க முடியும். இது கேன்சர் சிகிச்சைக்குப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
எப்படி வேறுபடுகிறது: பொதுவாக நமது உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு செல்கள் ரத்த நாளங்களைச் சுற்றி வந்து அச்சுறுத்தல்களைத் தேடும். இருப்பினும், குறிப்பிட்ட ஏற்பிகள் (receptors) இல்லாததால் கேன்சர் செல்களை அதனால் அழிக்க முடியாது. அதேநேரம் கடுமையான கொரோனா பாதிப்பு சமயத்தில் ஏற்படும் I-NCMகளில் CCR2 எனப்படும் ஒரு தனித்துவமான ஏற்பி இருக்கிறது. அவை ரத்த நாளங்களைத் தாண்டி கேன்சர் கட்டிக்குள் ஊடுருவும். அங்குச் சென்றதும் அது சில கெமிக்கல்களை வெளியிடும். அவை புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்க ஆரம்பித்து, கட்டியின் அளவை குறைக்கிறது" என்கிறார்.
அங்கித் குறிப்பிட்டதை போலவே இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும் இதன் முடிவுகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. நோயாளிகள் மீது பரிசோதனை செய்ய இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகும் என்றாலும் தற்போதைய முடிவுகள் பாசிட்டிவாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications