கொரோனா கோரத்தாண்டவம்: அமெரிக்காவில் முதல்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று
வாஷிங்டன்: அமெரிக்காவில் முதல்முறையாக ஒரே நாளில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது எந்த நாட்டிலும் இல்லாத சாதனையாகும்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 104,429 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 98,583 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதித்ததே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்காவில் 235,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர், இது உலகிலேயே மிக அதிகம் ஆகும்.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அமெரிக்கா முழுவதும் மருத்துவமனையில் கொரோனால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மிசோரி, ஓக்லஹோமா, இண்டியானா, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிகிறார்கள்
அயோவா மற்றும் மிசௌரியில் உள்ள மருத்துவமனையிலும் நோயாளிகள் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 9,840,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஒரு கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 8,392,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications