உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - அமெரிக்காவில் 3வது அலை அதிதீவிரம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 5,20,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,40,96,177 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வீச ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் அதிதீவிரமடைந்துள்ளது உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5,20,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,40,96,177 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 18,32,74,529 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் 1,65,06,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 5,20,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,40,96,177 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 5,05,814 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,3,274,529 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 7,924 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43,15,463 பேராக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,00,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3,67,78,369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,99,21,889 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 317 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,33,796 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் அன் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த பல மாகாணங்களில் கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 70 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு உருமாறிய கொரோனா வகையை சேர்ந்த டெல்டா வைரஸ்தான் காரணம் என்று கருதப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புளோரிடா மருத்துவமனை சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி மேரி மேஹியு கூறுகையில், தடுப்பூசி போடாதவர்களை டெல்டா வைரஸ் வேகமாக தாக்கி வருகிறது. ஜாக்சன்வில்லே, ஆர்லாண்டோ ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகை உச்சத்தை தொட்டுள்ளது என்றார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஹூஸ்டன் நகர மருத்துவமனைகளில் அவசரகால அறைகளில் படுக்கை இருப்பை தாண்டி நோயாளிகள் குவிந்து விட்டனர். படுக்கை வசதி கிடைக்காமல் நடைபாதையிலும், காத்திருப்பு அறையிலும் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நோய் பாதிப்பு குறைவாக இருந்தால், காத்திருப்பு அறையில்தான் இடம் கிடைக்கும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இதுபோல், குழந்தைகள் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தடுப்பூசி போட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு 19 மடங்கு தொற்று பாதிக்க வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள் போன்ற ஆபத்து இல்லாத நபர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் மறைமுகமாக மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி பவுசி கேட்டுக்கொண்டுள்ளார். ர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 12,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,01,78,143 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,89,39,051 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரேநாளில் 237 பேர் மரணமடைந்துள்ளனர் கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 5,63,707 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்று மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டக்கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.












Click it and Unblock the Notifications